மெல்பர்ன் - ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தொடர் இனவெறித் தாக்குதல் சம்பவத்தின் தொடர்ச்சியாக இந்திய பெண் நிருபர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் குடியேற்றத் துறை மற்றும் கல்வித் துறையில் நடைபெறும் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய பெண் நிருபர் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏபிசி தொலைக்காட்சியில் நிருபராக பணிறhற்றும் அந்தப் பெண் ஃபேர் கார்னர்ஸ் என்ற நிகழ்ச்சி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது மிரட்டப்பட்டதாகவும், நேற்று தாக்கப்பட்டதாகவும் அவர் பணியாற்றும் நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவேறு குடியேற்ற முகமைகளை அணுகிய அந்தப் பெண் நிருபர், ஆங்கில மொழித் தேர்வில் வெற்றி பெறவும், போலியான பணிச் சான்றிதழ் பெறவும் முயற்சி செய்துள்ளார். இதன் மூலம் எப்படி முறைகேடுகள் நடக்கின்றன என்பதையும், இந்தியர்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் அவர் வெளிச்சத்திற்கு கொண்டு வர முயற்சி செய்துள்ளார்.
இந்திய பெண் நிருபர் தாக்கப்பட்ட சம்பவத்தில் அந்த குடியேற்ற அமைப்புகளுக்கும் கல்வி அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது பற்றி தெரியவில்லை. இன்றிரவு ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சி வெளிநாட்டவர்கள், குறிப்பாக இந்தியர்கள் எப்படி ஏமாற்றப்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று ஏபிசி நிறுவனம் கூறியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment