Monday, June 6, 2016

அந்தமான் தமிழர்கள் ==================== பர்மாவில் அராகன் மலை. அங்கிருந்து தெற்கு நோக்கிச் சுமத்திரா தீவு வரை நீண்ட நெடிய மலைத் தொடர். அதன் தொடர்ச்சி கடலில் மூழ்கிப் போனது. எஞ்சிய சிகரங்களே இன்றைய அந்தமான் - நிக்கோபார் தீவுகள். சிறிதும் பெரிதுமாக 567 தீவுகள். அந்தமானின் தலைநகர் போர்ட் பிளையர் (Port Blair). கோலாலம்பூரில் இருந்து 1,365 கி.மீ. சென்னையில் இருந்து 1191 கி.மீ. தொலைவு. அந்தமான் தீவில் ஆப்பிரிக்கரைப் போன்ற கருப்பு நில பழங்குடிகள் வாழ்கின்றனர். 'நீக்ரிடோ' இனத்தவர். இவர்களின் ஊர்ப் பெயர்கள், பழக்க வழக்கங்கள், மொழியின் வேர்ச் சொற்கள் போன்றவை தமிழோடு இணைந்து போகின்றன. அந்தமான் என்ற பெயர் தமிழர் கொடுத்தது. மான்கள் நிறைந்து இருந்த காரணத்தால் அந்தப் பெயரில் அழைத்தனர். சோழர்களின் ஆட்சியில் தென்கிழக்காசியா முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதும் வரலாறு. நிக்கோபாருக்குத் தமிழர்கள் வைத்த பெயர் என்ன தெரியுமா. நக்கவரம். அந்தக் காலத்தில் அந்தத் தீவில் வாழ்ந்த மக்கள் நிர்வாணமாக இருந்ததால் அந்தப் பெயர் வைக்கப்பட்டது என்கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அரசியல் கைதிகளுக்கு வாழ்நாள் தண்டணை வழங்கி இங்கு குடியேற்றினர். சிறைச்சாலைக் கட்டுவதற்குச் சென்னையில் இருந்து தமிழர்கள் குடியேறினர். அரசியல் கைதிகளைத் தவிர மற்ற குற்றவாளிகளும் குடியேறினர். கூலித் தொழிலாளர்களாகவும் தமிழர்கள் பெருமளவில் குடியேறினர். அரசியல் கைதிகளில் வங்ளாதேசிகளும், மாப்பிளா கலகத்தில் போராடிய 1400 மலையாள மக்களும் குடியேறினார்கள். 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி வங்ளாதேசிகள் முதலிடம். தமிழர்கள் இரண்டாம் இடம். 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். தீவின் மொத்த மக்களில் இரண்டாம் இடத்தில் தமிழர்கள். இருந்தாலும் தமிழ்க் கல்வியைத் தருவதில் மத்திய அரசு தயக்கம் காட்டி வந்தது. தமிழர்களுக்குத் தமிழ்க் கல்வி கொடுக்காமல் இந்தி பேசும் இந்தியர்களாக மாற்ற வேண்டும் என்பதே அப்போதைய வியூகம். அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் ஆறாயிரம் தமிழ்க் குழந்தைகள் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு 33 பள்ளிகளில் கல்வி பயின்று வருகிறார்கள். அந்தமானில் உயர்க்கல்வி பயில தமிழகத்தையே எதிர்நோக்க வேண்டியுள்ளது. தமிழில் கல்லூரிக் கல்வியோ, பல்கலைக்கழக வசதியோ இல்லை. தமிழரின் எண்ணிக்கையைச் சிதறடிப்பதற்குப் பெரும் முயற்சி நடந்து வருகின்றன. கிழக்கு வங்கப் பிரிவினைக்குப் பின்னர் வங்ளாதேசிகள் கள்ளக் குடியேற்றம் நடந்து வருகிறது. பர்மா, இலங்கைத் தமிழர்களை அந்தமானில் குடியேற்றுங்கள் என்றால் வங்ளாதேசியர் மறுக்கின்றனர். தெற்கு அந்தமானில் தமிழர்களின் வீடுகளையும் விளை நிலங்களையும் வங்ளாதேசிகள் சூறையாடி வருகின்றனர். சூறாவளிப் புயல் மழையில் தமிழர்களின் குடியிருப்புக்கள் நாசம் செய்யப்பட்டன. தீவு ஆட்சியாளரிடம் வீடுகட்ட இடம் கேட்டபோது அவர் சொன்ன பதில்: "உங்களுக்கு வீடுகட்ட இடம் வேண்டுமானால் கருணாநிதியிடம், எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்" என்று அன்றைய தீவின் துணை ஆளுனரே பேசியதாகக் கூறப் படுகிறது. ஆளுனரின் நிலையே இதுவென்றால் மற்ற வங்ளாதேசியர் எப்படி இருப்பார்கள்? ஆனால் இங்கே மலேசியர்கள் வங்காளதேசிகளைச் சகோதரர்கள் மாதிரி பார்க்கிறார்கள். அங்கே அந்தமானில் தமிழர்களை வங்காளதேசிகள் துச்சமாக நினைக்கிறார்கள். தமிழ்ப் பெண்களின் கற்பைச் சூறையாடுகிறார்கள். வங்காளதேசிகளை இங்கே மனித நேயத்துடன் பார்க்கும் கலாசாரத்தை மாற்ற வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். மேலும்: http://ksmuthukrishnan.blogspot.my