Friday, November 13, 2009

உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி!!








இன ஒழிப்பு இன்னமும் நடந்தேறிக் கொண்டிருக்கும் சமாசாரம் என்றே கூற வேண்டும். உண்மையில் ஒரு இனத்தைப் பூண்டோடு அழித்துவிடுவது என்பது சாத்தியமற்றது. மாயாக்கள் விசித்திர குணாதிசயங்கள் கொண்ட மனித இனம். தென் அமேரிக்க பகுதியின் வாழ்ந்த இவ்வினம் இப்போது இல்லை. மாயாக்கள் அழிக்கப்பட்டார்களா, அழிந்து போனார்களா அல்லது மறைந்து போனார்களா?

அவர்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. ஆரம்ப காலம் முதல் பல முறை ஸ்பெயின் நாட்டினர் அங்கு படையெடுத்து இருக்கிறார்கள். ஸ்பெயின் நாட்டின் படையெடுப்பின் போது அவர்களுக்கு மாயக்களின் நுட்ப ஆய்வுகளை அறியும் ஆவல் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மாயாக்களின் வாழ்வியல் முறை அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம்.

மாயாக்களிடம் கட்டிடக் கலை, கணித, சமய நுட்பங்கள் அபரிமிதமாகவே இருந்திருக்கின்றன. ஸ்பெயின் சிப்பாய்களிடம் போர் கருவிகள் அதிகமாக இருந்தன. மாயாக்களிடம் நவீனப் போர் கருவிகள் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் செற்பம். மாயாக்கள் வாழ்ந்த காடு, அவர்களின் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் கைப்பற்றுவதற்காக அவர்கள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மாயாக்களின் கண்டுபிடிப்புகள் பல. அவற்றில் குறிப்பிடத்தக்கது வான்கணித முறைகள். அவற்றின் அடிப்படையில் உருவானதே மாயக்களின் நாட்காட்டி. மாயாக்களின் நாட்காட்டி இரகசியம் மிகுந்ததா? "இல்லை, அது விளங்காத ஒன்று" என்றே பலரும் சொல்வார்கள்.

புரியாத ஒன்றை வைத்து பல குளறுபடிகள் செய்கிறார்கள், கணிப்புகள் செய்கிறார்கள், இறுதியில் ஏதோ ஒரு முடிவு கட்டி இது தான் அது என சொல்லிவிடுகிறார்கள், எல்லாம் பிசகு, பொய் புரட்டு நிறைந்து கிடக்கிறது, என சிலர் அவற்றை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். சில பழமை நிகழ்வுக்கான காரணங்களைக் கண்டறிவதும் ஒரு சுகம் தான்.

மாயாக்களின் நாள்காட்டியில் ஒரு விசித்திரத்தைக் கண்டார்கள் ஆய்வாளர்கள். அந்த நாள்காட்டி 21 டிசம்பர் 2012-ஆம் ஆண்டு நிறைவடைகிறது. கி.மு 3113-ஆம் ஆண்டு அந்நாள்காட்டி தொடக்க ஆண்டாக அமைகிறது. இது முழுமை பெறாத நாள்காட்டியா? அல்லது மாயாக்களின் மறுபட்ட கணிப்பு முறையில் கண்டறியப்பட்டவையா?

அது என்ன மாயாக்களின் கணக்கு? அவர்களின் கணித முறை இப்படி விரிகிறது.
கின், உனியல், துன், கதுன், பக்துன், பிக்துன், கலப்துன்.

நாள் என்பதை அவர்கள் கின் எனக் குறிக்கிறார்கள்.
19 கின் (19 நாள்)= 1 உனியல்
359 நாள் = 1 துன்
7200 நாள் = 1 கதுன்
144 002 நாள் = 1 பக்துன்
1 872 025 நாள் = 13 பக்துன்
2 880 025 நாள் = 1 பிக்துன்
57 600 025 நாள் = 1 கலப்துன்

இந்த கணக்கியல் முறை இப்படி வியப்பளிப்பதாக இருக்கலாம். மாயாக்களின் நாள்காட்டி இயற்கை மாற்றங்கள் மற்றும் சீற்றங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. இவையாவும் இரு முக்கிய புத்தகங்களில் குறிக்கப்பட்டுள்ளது. அப்புத்தகங்கள் 'கொடெக்ஸ்' என அழைக்கப்படுகிறது. கொடெக்ஸ் பூமியை மட்டுமன்றி கோள் மாற்றங்களின் குறிப்புகளும் உள்ளடங்கியது. கோடெக்ஸ் வான் நிபுண மாயாக்களால் எழுதப்பட்டதாக அறியமுடிகிறது.

மாயா வகுப்பை சேர்ந்த வான் நிபுணர்கள் மாய மந்திர வேலைகள் கைதேர்ந்தவர்கள். அப்படியானால் இந்நாள்காட்டியின் நம்பகத்தன்மை எவ்வகையது எனும் கேள்வி நம்முள் எழுவது சாத்தியமாகிறது. ஆரம்ப கால வாழ்க்கையில் மனிதன் ஏதோ ஒரு வகையில் இயற்கையை சார்ந்தே வாழ்ந்திருக்கிறான். ஆதாலால் இயற்கையை போற்றும் வண்ணம் இம்மாதிரியான மாய மந்திர வேலைகள் ஏற்பட்டிருக்கலாம்.

கோடெக்ஸ், கணிதமும் சிறு சிறு சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும் புத்தகம். அச்சிறு சிறு எழுத்து வகைகளை ஹிரோகிலிஃப் எழுத்துகள் என அறிகிறோம். அந்த எழுத்துகள் எப்படி அமைந்திருக்கின்றன? பூமியில் உள்ள மனிதன் ஆகாயத்தில் இருக்கும் உயிரினங்களோடு தொடர்பு கொள்வது போலும், அவர்களுடைய கடவுளர்களோடு பேசுவது போலவும் உள்ளன.

இந்நாள்காட்டி கி.மு 20 செப்டம்பர் 3113-ஆம் திகதியில் தொடங்குகிறது. இக்காலகட்டம் மாயாக்களின் காலமென அழைக்கப்படுகிறது. அவர்களின் நம்பிக்கைப்படி இவ்வுலகம் புதுபிக்கப்படும். அப்படி புதுபிக்கப்படும் நாளானது மனித சரித்திரத்தில் முக்கிய நாளாக அமையும்.

கோள்களின் இட மாற்றமும் பூமியின் கால மாற்றமும் மனித வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளுக்கு பாதிப்பை விளைவிற்கின்றன என்பது இவர்களின் கருத்தாகும். பூர்வ கால எகிப்திய மக்களிடையேயும் இவ்வகை நம்பிக்கை இருப்பதை நாம் காண முடிகிறது. Asy Syi'ra நட்சத்திரம் நைல் நதியை கடக்கும் வேளையில் தீமைகள் விளையும் எனும் நம்பிக்கையை கொண்டிருந்தார்கள் அவர்கள்.

21 டிசம்பர் 2012 End of Times என ஆய்வாலர்களாலும் அறிஞர்களாலும் குறிப்பிடபடுகிறது. இந்த End of Times எனும் சொல்லுக்காகன விவாதங்கள் இன்னமும் மள்ளுக்கட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. எடுத்த எடுப்பில் அதுதான் பூமியின் இறுதி நாள் என சொல்லிவிடுவோர் பலர் உண்டு. ஆனால் ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களின் பார்வையில் அச்செற்களுக்கான ஆய்வுகள் ஆழமானவை. அவற்றில் வேடிக்கையான சில சேதிகளும் உண்டு.

பூமி சுற்றுவது நின்றுவிடும் ( கால நேர மாற்றம் இருக்காது), காலம் Pisces எனப்படும் மீனத்தில் ஒரு சுற்று முடிந்து Aquarius எனப்படும் மேஷத்தில் ஆரம்பமாகப் போகும் நாள், உலகம் வெள்ளி நூற்றாண்டில் இருந்து தங்க நூற்றாண்டிற்கு மாற்றம் காண்கிறது, அதீதமான இயற்கைச் சீற்றம் ஏற்பட்டு உலகில் மாற்றங்கள் உறுவாகும், உலகைக் காக்க கடவுளர் எழும் நாள், காலம் பின்நோக்கி நகரும், வேற்றுக் கிரக வாசிகளோடு தொடர்பு உண்டாகும் நாள்.

அத்திகதியை பற்றிய மேற்காணும் விடயங்கள் நகைப்புக்குறியவை. தமிழில் செலுத்தப்பட்ட ஆரிய கதைகளைப் போலவே மனிதர்களின் மனதில் மடத்தனத்தை உட்புகுத்துபவை.

இன்று எழுதப்படுபவனவற்றில் சில வேளைகளில் உண்மைகள் கேள்விக்குறியானதாக இருக்கிறது. 1999-ஆம் ஆண்டு முடிந்தவுடன் உலகத்தின் கதி முடிவடையும் என நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டதாக ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார்கள். ஆனால் இன்றோ ஆண்டு 2009 ஆகிவிட்டது. நாஸ்ட்ராடாமஸ் சொன்னது பொய்யா இல்லை புத்தகத்தில் எழுதிய விடயம் பொய்யா?

உலக சரித்திரத்தின் அடிப்படையில் மாயாக்கள் மாய மந்திர வேலைகளில் கைதேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடபடுகிறது. திறமையான சிந்தனை வளத்தினால் அருமையான நாகரிகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதைப் போலவே அவர்களின் நாட்காட்டியும் முழுமையான நிலையில் கணிக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.

இந்த மாயாக்களின் ஒரு பிரிவினர் தென் மெக்சிக்கோவின் Guetmala, Belize மற்றும் Honduras போன்ற பகுதிகளில் வாழ்ந்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது. பூர்வகால கட்டிடங்களும், பிரமீடுகளும், மற்றும் கோவில்களும் இங்கு இருக்கிறது.

1517-ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் படையெடுப்பின் போது மாயாக்களின் கலை மற்றும் இதர தொழில்நுட்ப வேலைப்பாடுகள் பலவும் பரவலாக அழிந்து போனது. அவற்றில் முக்கியமாக மாயாக்களின் நூலகமும் அழிந்தது. அவ்வகையில் காண்போம் என்றால் இந்த நாட்காட்டியிலும் பிசகு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

Dr. Jose Argulles ஓர் அமேரிக்கர். அவர் சரித்திர ஆய்வாளர் ஆவார். Zhou Yi எனும் சீனக் குடியினரின் கணக்கியல் முறையும் மாயாக்களின் கணக்கியல் முறையும் ஒத்துப் போகிறது என்பது இவர் கருத்தாகும்.

1973-ஆம் ஆண்டு வெளிவந்த 'The Mayan Factor' எனும் தமது நூலில் பல விடயங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். தற்போதய நிலையில் இப்பிரபஞ்சத்தில் "The Great Cycle' எனும் மாபெரும் சுழற்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிது. அதன் கால அளவு ஏறக்குறைய 5000 ஆண்டுகள் என குறிக்கப்படுகிறது. அதன் அடிப்படியில் மாயாக்களின் கி.மு 3113 முதல் கி.பி 2012 வரையிலான நாள்காட்டி அமைந்திருக்கக் கூடும் என கருத்துரைக்கிறார்.

இந்த மாபெரும் சுழற்சி முடியும் தருவாயில் உலகில் மாறுதல்கள் உண்டாகும் சாத்தியங்கள் இருப்பதாக மாயக்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். இக்கணித முறை சிறு கூறுகளாக பிரிக்கப்பட்டு ஓவ்வொரு காலகட்டத்திற்கும் குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை இருபது இருபது ஆண்டுகளாக பிறிக்கப்படுகிறது.

அக்கணித முறையின் இறுதி காலகட்டமாக கருதப்படுவது 1992 முதல் 2012 ஆண்டுகளாகும். இது மொத்தம் 20 ஆண்டுகளைக் கொண்டிருக்கிறது. இதை 'The Earth Regenaration Period எனக் குறிப்பிடுகிறார்கள்.

பதிவை சமர்பித்தவர் VIKNESHWARAN

Tuesday, November 3, 2009

ஒரே மலேசியா கோட்பாடு - ஒரு அலசல்!!




மலேசிய பிரதமர் நஜீப் துன் இரசாக் அறிமுகப்படுத்தியிருக்கும், ஒரு புதிய கோட்பாடு ஒரே மலேசியா கோட்பாடு. இந்த ஒரே மலேசியா கோட்பாட்டைப் பற்றிய சந்தேகங்களை பல தரப்பினரும், பல நேரங்களிலும் எழுப்பி வருகையில், உண்மையில் இந்தக் கோட்பாட்டின் அடிப்படை அம்சங்கள் என்னவென்பது இதுவரையிலும் புரியாத புதிராகவே உள்ளது. மலேசியா, மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், சபா,சரவா பூர்வக்குடியினர், ஒராங் அஸ்லியினர், என்று பல இனங்களை தன்னகத்தேக் கொண்ட ஒரு நாடு. ஆனால், இங்கு இனவாதத்தின் அடிப்படையிலேயே அனைத்தும் நடக்கின்றன என்றால், அது மிகையாகாது. இந்த ஒரே மலேசியா கோட்பாடு உண்மையில், எதனைக் குறிக்கின்றது? இனவரையறைகளற்ற ஒரு மலேசிய தேசத்தை குறிப்பதாகவே இந்த கோட்பாடு காட்டப்படுகின்றது; உண்மையில் இன வரையறைகளைக் கடந்த ஒரு மலேசிய சமூகத்தை நாம் அடைந்து விட்டோமா என்ற கேள்விக்கு நிச்சயம் இல்லையென்பதுதான் பதிலாக இருக்கும்.

இன வேறுபாடுகளற்ற ஒரு மலேசியா, இந்த நொடி வரை ஒரு கானல் நீரைப் போன்றதாகவே உள்ளது. இந்த ஒரு மலேசியா கோட்பாடானது, புதிய பிரதமரான நஜீப்பீன் ஒரு விளம்பர சுலோகம் என்பதுதான் உண்மை. ஒரே மலேசியா கோட்பாடு, நமது நாட்டிலுள்ள இனங்களை ஒன்றினைக்கும் கோட்பாடு என்பது அரசாங்கத்தின் வாதமாக இருக்கின்றது. சுதந்திரம் பெற்று ஐம்பத்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்ட பொழுதிலும், ஒற்றுமையை வலுப்படுத்துங்கள் என்று மக்களுக்கு அரசாங்கம் வலியுறுத்தத்தான் வேண்டுமா? ஒற்றுமை என்பது அவ்வாறு வலியுறுத்தினால்தான் ஏற்படுமா? பல்வேறு வளர்ச்சிகளை, மாற்றங்களை கண்ட மலேசியர்கள் ஒற்றுமை என்ற ஒரு அம்சத்தில் மட்டும் இறுக்கமாக இருந்ததற்கு காரணம் என்ன? இவ்வாறான பல கேள்விகளுக்கு பதிலை அளித்துவிட்டு, ஒரே மலேசியா கோட்பாட்டை முன்னிறுத்த அரசாங்கம் முயல வேண்டும்.

காலங்காலமாக, மலாய்க்காரர் அல்லாத சமூகத்தை மிரட்டுவதற்கு “மே 13” இனக்கலவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. மலாய்க்காரர்கள் அல்லாதோர் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கூட கேட்கக்கூடாது என்பது வாக்கில், இந்த “மே 13” இனக்கலவரத்தை முன்னிறுத்தி மிரட்டப்பட்டு வந்தனர். “எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள்; மே 13 மீண்டும் நிகழும்” என்பது ஒரு குறிப்பிட்ட மலாய் பிரிவினரின் மிரட்டல் வாசகமாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக மலேசியாவை ஆளும் கூட்டணியின் முக்கிய பங்காளிக்கட்சியான அம்னோவினரே இவ்வாறான வாசகங்களை அதிகம் உபயோகித்துள்ளனர் என்பதை கடந்த கால சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றன. அம்னோவினர் அவ்வாறு மிரட்டும் பொழுதெல்லாம், அம்னோவின் “கங்காணிகளான” மசீசாவும், மஇகாவும், அம்னோக்காரர்களின் மிரட்டல்கள் உண்மையாகிவிடும் என்பது போலவே தத்தம் சமுதாயங்களை ஏமாற்றியுள்ளனர்.
துங்கு இரசாலியோடு தேசத்தந்தை துங்கு அப்துல் ரஹ்மான்

இதற்கு தக்க உதாரணமாக, 1989இல் “ஒப்பராசி லாலாங்”கின் போது நிகழ்ந்த சம்பவங்களைக் கூறலாம். 1989இல், சீன பள்ளிகளில் அதிகமான மலாய் ஆசிரியர்களை நியமிப்பதைக் கட்டுப்படுத்தக்கோரி சீன சமுதாயம் குரல் எழுப்பியது. மலேசிய சீன சமூகத்தினரிடம் மிகவும் செல்வாக்குப்பெற்ற சீனர் கல்வி இயக்கங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தன. (சீனர்களின் இந்த கல்வி இயக்கங்களானவை, நாட்டில் சீனர்களின் அரசியலையும் முடிவு செய்யும் மிக முக்கிய இயக்கங்கள்; இந்த சீன கல்வி இயக்கங்களின் ஆதரவுப்பெற்ற வேட்பாளர்கள், சீனர் பெரும்பான்மை தொகுதிகளில் நிச்சயம் வென்றுவிடுவார்கள் என்று சூடம் ஏற்றி சத்தியம் கூட செய்யலாம். மலேசியாவில் உள்ள சீன பள்ளிகளும், அதன் அடைவுநிலைகளும் இதற்கு சான்று. சுறுக்கமாக சொன்னால், மலேசிய சீனர்களின் அரசியலைக் கூட நிர்ணயிப்பது கல்விக்குழுக்களாகவே உள்ளன; நமது சமுதாயத்திலோ, கல்வியையும், கோயிலையும் முடிவு செய்வது அரசியலாக உள்ளது). அப்பொழுது பிரதமராக இருந்த மகாதீர் முகமட், அவர்தம் அம்னோ சகாக்களுமாக சேர்ந்து, இதனை மாபெரும் இனப்பிரச்சனையாக உருவாக்கி, அரசியல் இலாபம் தேடினர். சீனர் பள்ளிகளில், சீனர் ஆசிரியர்களை அதிகம் நியமிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை; உடனே, மலாய்க்காரர்களை நியமிப்பதை சீனர்கள் தட்டிக்கேட்டு விட்டார்களெனவும், அதனால் மலாய்க்காரர்களின் சிறப்புரிமையை கேள்விக்கேட்டு விட்டனர் எனவும் அம்னோ கூப்பாடுப்போட்டது. அக்காலத்தில், அம்னோ பல்வேறு பொதுக்கூட்டங்களைக் கூட்டியது; பல்வேறான இன துவேச வாசகங்கள் அள்ளி வீசப்பட்டன; “மலாய்க்காரர்களின் குத்துக்கத்தி (கெரிஸ்), சீனர்களின் இரத்தத்தில் நனையப்போகிறது” என்பது மிக பிரபலமான வாசகமாகும். (இந்த வாசகத்தை தனது திருவாயால் உதிர்த்தவர், இந்நாள் பிரதமர் என்று கூறப்படுகிறது, இருப்பினும் கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், கர்ப்பால் சிங் இது தொடர்பாக எழுப்பிய வினாவிற்கு, நஜீப் அவ்வாறு கூறவில்லை என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டது) இனங்களுக்கிடையான பதற்றத்தை ஏற்படுத்தியது, அம்னோவினரின் இந்த கூட்டங்கள்தான்; ஆனால், ஒப்பராசி லாலாங் நடவடிக்கையில், உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதெல்லாம பெரும்பாலும் எதிர்கட்சி தலைவர்கள். (கர்ப்பால் சிங், லிம் கிட் சியாங், லிம் குவான் எங், மக்கள் தொண்டன் வி.டேவிட், மக்கள் சேவகன் பி.பட்டு, பாஸ் கட்சியின் மாட் சாபு ஆகியோர் ஒப்பராசி லாலாங்கில் கைது செய்யப்பட்டோரில் அடங்குவர்). அதோடு மட்டுமல்லாமல், பல பத்திரிக்கைகளின் உரிமங்கள் உடனுக்குடன் பறிக்கப்பட்டு, அந்த பத்திரிக்கைகள் தடை செய்யப்பட்டன (ஸ்டார் ஆங்கில நாளேடு உட்பட). ஒரு சாதரண பள்ளி சம்பந்தப்பட்ட விசயத்தை கேள்வியெழுப்பப்பட்டதற்காக, ஒரு இன பதற்றம் உருவாக்கப்பட்டது; அந்த பதற்றைச் சுட்டிக்காட்டி, 1990இல், துங்கு இராசாலியின் செமாங்காட் 46 தலைமையிலான பலம்பொருந்திய எதிர்கட்சிக் கூட்டணியை தோற்கடித்தது அம்னோ தலைமையிலான தேசிய
முன்னணி.
பத்திரிக்கைகளின் உரிமங்கள் உடனுக்குடன் பறிக்கப்பட்டு, அந்த பத்திரிக்கைகள் தடை செய்யப்பட்டன (ஸ்டார் ஆங்கில நாளேடு உட்பட). ஒரு சாதரண பள்ளி சம்பந்தப்பட்ட விசயத்தை கேள்வியெழுப்பப்பட்டதற்காக, ஒரு இன பதற்றம் உருவாக்கப்பட்டது; அந்த பதற்றைச் சுட்டிக்காட்டி, 1990இல், துங்கு இராசாலியின் செமாங்காட் 46 தலைமையிலான பலம்பொருந்திய எதிர்கட்சிக் கூட்டணியை தோற்கடித்தது அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி.

"மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள்" group.

Space hotel says it's on schedule to open in 2012


BARCELONA (Reuters) – A company behind plans to open the first hotel in space says it is on target to accept its first paying guests in 2012 despite critics questioning the investment and time frame for the multi-billion dollar project.

The Barcelona-based architects of The Galactic Suite Space Resort say it will cost 3 million euro ($4.4 million) for a three-night stay at the hotel, with this price including an eight-week training course on a tropical island.

During their stay, guests would see the sun rise 15 times a day and travel around the world every 80 minutes. They would wear velcro suits so they can crawl around their pod rooms by sticking themselves to the walls like Spiderman.

Galactic Suite Ltd's CEO Xavier Claramunt, a former aerospace engineer, said the project will put his company (http://www.galacticsuite.com) at the forefront of an infant industry with a huge future ahead of it, and forecast space travel will become common in the future.

"It's very normal to think that your children, possibly within 15 years, could spend a weekend in space," he told Reuters Television.

A nascent space tourism industry is beginning to take shape with construction underway in New Mexico of Spaceport America, the world's first facility built specifically for space-bound commercial customers and fee-paying passengers.

British tycoon Richard Branson's space tours firm, Virgin Galactic, will use the facility to propel tourists into suborbital space at a cost of $200,000 a ride.

Galactic Suite Ltd, set up in 2007, hopes to start its project with a single pod in orbit 450 km (280 miles) above the earth, traveling at 30,000 km per hour, with the capacity to hold four guests and two astronaut-pilots.

It will take a day and a half to reach the pod - which Claramunt compared to a mountain retreat, with no staff to greet the traveler.

"When the passengers arrive in the rocket, they will join it for 3 days, rocket and capsule. With this we create in the tourist a confidence that he hasn't been abandoned. After 3 days the passenger returns to the transport rocket and returns to earth," he said.

More than 200 people have expressed an interest in traveling to the space hotel and at least 43 people have already reserved.

The numbers are similar for Virgin Galactic with 300 people already paid or signed up for the trip but unlike Branson, Galactic Suite say they will use Russian rockets to transport their guests into space from a spaceport to be built on an island in the Caribbean.

But critics have questioned the project, saying the time frame is unreasonable and also where the money is coming from to finance the project.

Claramunt said an anonymous billionaire space enthusiast has granted $3 billion to finance the project.