Wednesday, December 22, 2021

ருண பந்தம்

 


"  ருண பந்தம்"

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம்.

அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம். சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம். சிலருக்கு நல்லது செய்கிறோம். பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறோம்.


இந்த கொடுக்கல் வாங்கலே "ருண பந்தம்" எனப்படுகிறது. சிலருடைய உறவுகள் ஆனந்தத்தைக் கொடுக்கிறது. சிலருடைய வருகை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சிலர் கூடவே இருந்து தொல்லைப் படுத்துகிறார்கள். சிலரின் வருகை துக்கத்தை ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் இது ஏன் நிகழ்கிறது என்று தெரியாமலேயே தன் போக்கில் நம் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


கனவில் கூட காண முடியாத பல ஆச்சர்யங்கள் நமக்கு சில சமயங்களில் ஏற்படுகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம்? ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள்? நாமே நம் தாய் தந்தையை, சகோதர சகோதரிகளை, நண்பர்களை, மனைவியை, கணவனை, பிள்ளைகளை, தேர்ந்தெடுப்பதில்லை. நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யாரேனும் கூறலாம்.


ஆனாலும் அதுவும் தானே நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது. முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு நம் கையில் இல்லை. ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய்விடுவர். அது இறப்பால் மட்டும் அல்ல, பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும் நம் வாழ்வில் வேறு கோணத்தில் வேறு பார்வையில் தோன்றுவர். எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது. அது என்ன? சமன் செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும் கர்ம கதிகளின் எச்சங்களே அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை ஏற்படுத்துகிறதா? இதற்கெல்லாம் தெரிந்த ஒரேயொரு காரணம் நம்முடைய "கர்ம வினை" தான்.


இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம். அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம். அந்தக் கூட்டின் பெயரே "சஞ்சித கர்மா" எனப்படுகிறது. அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே 'பிராரப்தக் கர்மா' எனப்படுகிறது.


இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல் நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது. நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது. இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம் ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக் கொள்கிறோம். இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே. இது தவிர 'ஆகாம்ய கர்மா' என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல - கெட்ட செயல்களால் ஏற்படுவது.


யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது. அவரவர்கள் செய்வினையின் பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும் வாழ்க்கை அமையும். துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும், ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும், அவரவர்கள் கர்ம கதியே. இதைத் தான் "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று சொல்லப்படுகிறது.


நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு. அப்படி என்றால் ஆகாமி கர்மா நம்முடைய கையிலேயே இருக்கிறது. இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும், நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன் கையிலேயே உள்ளது.


நீங்கள் செய்யும் நற்செயல்களையும், வினைச் செயல்களையும் நீங்கள் மட்டுமே ஏதோ ஒரு பிறவியில் அனுபவிக்கப்போகிறீர்கள் என்பதை உணர்ந்தால், நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? எப்படி நடந்து கொள்ளப் போகிறீர்கள்? எது போன்ற வாழ்க்கைத் தடத்தை ஏற்படுத்திக்கொள்ளப் போகிறீர்கள் என்பது உங்களுக்குப் புலப்படும்.


பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது. இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும். பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது.


ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான். அதேபோல பெரும் பணக்காரர்களையும் 'துக்கங்கள்' விடுவதில்லை. சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை உண்ண முடியாது.


பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தன கால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது. 'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்', 'விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்' நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச் செய்வது மட்டுமே. பலனை ஆண்டவனிடம் விட்டு விடுவோம். நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் துன்பத்தையும் சோகத்தையுமே பலனாகப் பெறுகிறோம்.


எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை. நமக்கு நடக்கும் நடக்கப்போகும் நல்லதை யாராலும் கெடுக்க முடியாது. அதேபோல் தீமையையும் கெடுக்க முடியாது.

Wednesday, December 8, 2021

மனிதப் பிறப்பு

 திருமூலரின்  திருமந்திரத்தில் -

( ஆண்/பெண்  குழந்தை  பிறக்க )

குழந்தை  குறையில்லாது பிறக்க, "உடல் உறவு மூலம்  நல்ல குழந்தை

உண்டாக "திருமூலர் பெருமான்" கூறிய நமது  பாரம்பரிய அபூர்வ ரகசியங்களை  நம் சித்தர்களின் குரல் அன்பர்களுக்காக முழுமையாக எழுதுகிறேன்.!!!


அவசியம் ஒவ்வொரு மனிதரும் அறிய வேண்டிய அற்புத பதிவு

உறவின் போதே ஆண்/பெண்/அலி/திறமை/ஊனம் நிற்ணயிக்க படுகிறது)

மாண்பதுவாக வளர்கின்ற வன்னியும்

காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை

பூண்பது மாதா பிதா வழி போலவே

ஆம்பதி செய்தான் அச் சோதி தன் ஆண்மையே. 

                    - திருமந்திரம் = 477


(477) இறைவன் தாய் தந்தை வழி உடலைப் படைக்கின்றான்:


உயிர்க்கு ஆண், பெண், அலி என்ற வேறுபாடு இல்லை. பெருமையுடனே வளர்கின்ற ஒளியான உயிரை ஆண் என்றோ பெண் என்றோ அலி என்றோ காண்பது கற்பனையாகும். அப்படிப்பட்ட உயிருக்கு ஏற்ற உடலை தாய் தந்தையின் தன்மையைக் கொண்டு படைப்பது சிவபெருமானின் வல்லமையாம்.


ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும்

பூண்இரண்டு ஒத்துப் பொருந்தில் அலியாகும்

தாண்மிகும் ஆகில் தரணி முழுது ஆளும்

பாணவம் மிக்கிடின் பாய்ந்ததும் இல்லையே. 

                       - திருமந்திரம் = 478


(478) கருவில் ஆண் பெண் மாற்றம் அமையும் விதம்:


ஆண் பெண் கூடும் போது ஆண் பண்பு மிகுந்தால் அவ்வுயிர் ஆண் ஆகும். பெண் பண்பு மிகுந்தால் அவ்வுயிர் பெண்ணாகும். ஆண் பெண் பண்பு சமமானால் அவ்வுயிர் அலியாகும். ஆள் வினை முயற்சியில் கருத்து மிகுதியாய் இருந்தால் பிறக்கும் உயிர் சிறப்பாய்ப் பிறக்கும். அது உலகை ஆளும். கூட்டுறவின் போது தாழ்ச்சி மனப்பான்மை இருக்குமானால் சுக்கிலம் பாய்வது நின்று விடும்.


பாய்ந்தபின் அஞ்சுஓடில் ஆயுளும் நூறு ஆகும்

பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்

பாய்ந்திடும் வாயுப் பகுத்து அறிந்து இவ்வகை

பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே. 

              - திருமந்திரம் = 479


(479) யோகி சுக்கிலத்தைப் பாய்ச்சல்:


ஆணின் சுக்கிலம் ஆணிடமிருந்து பிரிந்து ஐந்து விரற்கிடை ஓடி விழுமாயின் பிறக்கும் உயிரின் வாழ்வு நூறு ஆண்டு. அந்தச் சுக்கிலம் நான்கு விரற்கிடை ஓடி விழுந்தால் அந்தஉயிரின் வாழ்வு எண்பதாண்டு. சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவை இப்படி நன்றாய் உணர்ந்து பாய்ந்திடச் செய்யும் ஆற்றல் யோகிக்கு உண்டு. யோகி வேண்டியபடி சுக்கிலத்தைச் செலுத்தி விரும்பியபடி குழந்தை பெற முடியும்.


பாய்கின்ற வாயுக் குறையின் குறள் ஆகும்

பாய்கின்ற வாயு விளைக்கின் மு


டம் ஆகும்

பாய்கின்ற வாயு நடுப்படின் கூன் ஆகும்

பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே. 

                  - திருமந்திரம் = 480


(480) சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவுக்கு ஏற்பக் குழந்தையின் அங்கம் அமைதல்:


சுக்கிலத்தைச் செலுத்தும் வாயு குறைந்திடின் குழந்தையானது குட்டையாய்ப் பிறக்கும். பாயும் வாயு மெலிந்திடின் முடமாகும். அவ்வாயு தடைப்பட்டால் குழந்தை கூனாய்ப் பிறக்கும். ஆனால், ஆராய்ந்து பார்த்தால், பெண்களுக்கு வாயு இல்லை.


மாதா உதரம் மலம் மிகின் மந்தன் ஆம்

மாதா உதரம் சலம் மிகின் மூங்கை ஆம்

மாதா உதரம் இரண்டு ஒக்கின் கண் இல்லை

மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.      

                - திருமந்திரம் = 481


(481)  கரு வளரும் காலத்தில் தாயின் வயிறு இருக்க வேண்டிய நிலைமை:


அன்னையின் வயிற்றில் கருவாக அமைந்த குழந்தைக்கு அந்த அன்னையின் வயிற்றில் மலம் மிகுமானால் அக்குழந்தை மந்த புத்தியுடையதாய் விளங்கும். அவள் வயிற்றில் நீர் மிகுமானால் அந்தக் குழந்தை ஊமையாய் விடும். மலமும் நீரும் மிகுந்து இருக்குமானால் அக்குழந்தை குருடாகிவிடும்.


குழவியும் ஆணாம் வலத்தது வாகில்

குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்

குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்

குழவி அலி ஆகும்கொண்ட கால் ஒக்கிலே. 

               - திருமந்திரம் = 482


(482) மூச்சுக் காற்றின் இயல்புக்கு ஏற்பக் குழந்தையின் பால் வேறுபாடு அமையும்:


இன்ப நுகர்ச்சியின் போது ஆண்மகனிடம் உயிர்ப்பான மூச்சு வலது பக்க நாசியில் (சூரிய கலையில்) இயங்கினால் ஆண் குழந்தையாகும்.

ஆண்மகனிடம் உயிர்ப்பான மூச்சு இடது பக்க நாசியில் (சந்திர கலையில்) இயங்கினால் பெண் குழந்தையாகும்.

ஆணின் மூச்சு வலது பக்க நாசியிலும், இடது பக்க நாசியிலும் இரண்டும் ஒத்து இயங்கினால் குழந்தை அலியாகும்.

சுக்கிலத்தைச் செலுத்தும் பிராண வாயுவுடன் அபானன் எனப்படும் மலக்காற்று எதிர்த்தால் சுக்கிலம் சிதைந்து இரட்டைக் குழந்தையாகும்.

கொண்டநல் வாயு 


இருவர்க்கும் ஒத்தெழில்

கொண்ட குழவியுங் கோமளம் ஆயிடும்

கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்

கொண்டதும் இல்லையாம் கோள்வளை யாட்கே. 

                - திருமந்திரம் = 483


(483) உயிர்ப்பின் இயக்கத்து ஏற்பக் கரு அமைதல்:


ஆண் பெண் இருவருக்கும் உயிர்ப்பு ஒத்து இருக்குமானால் கருவில் உள்ள குழந்தை அழகாக விளங்கும். புணரும் அக்காலத்தில் அந்த இருவருக்கும் உயிர்ப்புத் தடுமாறினால் பெண்ணுக்குக் கரு உண்டாக வாய்ப்பு இல்லையாகும்.


கோள்வளை உந்தியில் கொண்ட குழவியும்

தால்வளை உள்ளே தயங்கிய சோதியாம்

பால்வளர்ந்து உள்ளே பகலவன் பொன் உருப்

போல் வளர்ந்து உள்ளே பொருந்து உரு ஆமே. 

                  - திருமந்திரம் = 484


(484) பொற்சிலை எனப் பிறக்குமாறு:


பெண்ணின் வயிற்றில் அமைந்த குழந்தை அண்ணாக்கினுள்ளே விளங்கும் பேரொளி போன்றதாகும். அக் குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்து வளர்ந்து சூரியனின் பொன் வடிவைப் போன்று வளர்ந்து முழு வடிவத்தைப் பெறும்.


குழந்தை குறையில்லாது பிறக்க திருமூலர் சொல்லும் தகவல்!!!

------------------------------------------------------------------------------------------------------------------------------


"அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது, கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிது" என்றார் தமிழ் மூதாட்டி அவ்வை. இத்தகைய எல்லா நலத்துடன் கூடிய குழந்தையை பெற்றெடுக்க சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் என்கிறார் திருமூலர். (மேற்படி தகவல்களைகூறிய சித்தர்களுள் மிகச்சிறந்தவரான திருமூலர் 5,900 ஆண்டுகள், அதாவது கி.மு.6 ஆயிரம் முதல் கி.மு.100 வரையில் வாழ்ந்ததாக கூறுகிறார்கள்)


ஒரு குழந்தை குறையுடன் பிறக்கிறது

என்றால் அதற்கு காரணம் ஆண்கள் தான் என்கிறார் திருமூலர். 


தாம்பத்திய உறவின் போது மன அமைதி, தெளிவு, விவேகம் இன்றி மிருகத்தனமாக ஆண்கள் நடந்து கொண்டால் குறைபாடுள்ள குழந்தை தான் பிறக்கும் என்று கூறும் அவர், கணவன் ஆனவன், தனது வாயு நிலையை அறிந்து, பொறுமை காத்து, மனைவியுடன் கூடிக் குலாவி கலவி செய்தால் இதனை தவிர்க்கலாம் என்றும் கூறுகிறார்.


கணவனும், மனைவியும் கூடும் முறையால், எப்படிப்பட்ட குழந்தை பிறக்கிறது என்பதற்கு திருமூலர் தரும் விளக்கம்......


மனைவியுடன் கணவன் உறவு கொள்ளும்போது அவனது சுவாசமானது

சீரான அளவோடு பாய வேண்டும். அவ்வாறு இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு உடல் குறை எதுவும் இருக்காது. 


உறவின் போது ஆணின் வலது நாசி வழியாக சுவாசம் சென்றால் ஆண் குழந்தை உருவாகும். சுவாசம் இடது பக்கம் சென்றால் அது பெண்

குழந்தை உருவாக காரணமாகும். இரு நாசியின் வழியாகவும் மூச்சு ஒரே மாதிரி வந்தால் பிறக்கும் குழந்தை ஆணாகவும் இல்லாமல், பெண்ணாகவும் இல்லாமல் திருநங்கையாக இருக்கும்.


ஆணின் சுவாசமானது அளவில் குறைந்து போனால் பிறக்கும் குழந்தை குள்ள வடிவமாக? இருக்கும். சுவாசம் இயல்பான நிலையில் இல்லாமல்

இளைத்து வெளிப்படுமானால் பிறக்கும்

குழந்தை முடமாகும். சுவாசத்தின் அளவு குறைந்தும், திடமின்றியும் வெளிப்பட்டால் பிறக்கும் குழந்தைக்கு கூன் விழும்.


இப்படி, தனது திருமந்திரத்தில் விளக்கம் தரும் திருமூலர், "அந்த" உறவின்போது பெண்கள் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதையும் பட்டியலிடுகிறார்.


கூடலின்போது பெண்ணின் வயிற்றில் மலம் சரிவர கழியாமல் தங்கி மிச்சம் இருந்தால் பிறக்கும் குழந்தை மந்த குணம் கொண்டதாக இருக்கும். இதுபோல், பெண்ணின் உடலில் சிறுநீர்

தங்கியிருந்தால் பிறக்கும் குழந்தை

ஊமையாகவும், மலம், சிறுநீர் இரண்டும்

சரியான அளவில் தேங்கி இருக்குமானால் பிறக்கும் குழந்தை குருடாகும் என்கிறார்.


சரி... எந்த நிலையில் தான் நல்ல,

ஆரோக்கியமான குழந்தை பெற முடியும்

என்று கேட்கிறீர்களா? அதற்கு திருமூலரின் பதில்......


தாம்பத்திய உறவின்போது ஆண் & பெண் இருவரது மூச்சுக் காற்றும் ஒரே அளவாக இருக்க வேண்டும்.  அவ்வாறு மூச்சு வரும்போது வெளிப்படும் ஆணின் விந்து, பெண்ணின் சுரோணிதத்துடன் (கருமுட்டை) சேர்ந்து உண்டாகும் குழந்தையானது மிகுந்த அழகினை உடையதாக இருக்கும். ஆண் தக்க மூச்சுப்பயிற்சி பெற்றிருந்தால், அவன் எண்ணும் விருப்பப்படி மூச்சினை அடக்கி, கட்டுப்படுத்தி, தான் விரும்பும் வகையில் மூச்சினை வெளியிடும் ஆற்றலை பெற முடியும். அவ்வாறு இருக்கும் போது, குழந்தையின் தோற்றத்திலும் தான் விரும்பியதை ஒரு ஆண் சாதிக்க முடியும்.


இப்படி அறிவுரை வழங்கும் திருமூலர், அந்த நேரத்திற்கு எப்படி தயாராவது என்பது பற்றியும் கூறியுள்ளார்.


உறவு கொள்ளும் காலத்தை முன்னதாகவே திட்டமிட்டு, கணவன், மனைவி இருவரும் தங்களில் மலம், சிறுநீர் எதுவும் தங்காதபடி, அவற்றை வெளியேற்றி விட வேண்டும். ஒருமித்த எண்ணத்துடன், படபடப்பு எதுவும் இன்றி, உணவு உட்கொண்ட பின்னர், வயிற்றில் அந்த உணவு ஜீரணமாகும் வரை காத்திருக்க வேண்டும். தொடர்ந்து, காதல் இன்பம் பேசி, ஒருவரை ஒருவர் தழுவி, தீண்டி, புற உடல் இன்பங்களை துய்த்து, அதன் பின்னரே புணர்தல் வேண்டும். அப்போதும், மூச்சு படபடப்பாக வெளிப்படக் கூடாது. இருவரும் சீரான அளவில் மூச்சை

வெளியிட வேண்டும். இதில் வேகம் காட்டுவது வீண் கரு கலைதலுக்கு

ஏதுவாகும் என்கிறார் திருமூலர்.


உடலுறவில் கணவனும் மனைவியும்:

-------------------------------------------------------------------


மாதம் ஒன்றுக்கு எத்தனை முறை கணவனும் மனைவியும் ஒன்று சேரலாம்? தற்போது நமது இந்திய நாட்டில் பெரும்பாலும் பகல், இரவு, எந்த நேரத்திலும் தாம்பத்தியம் கொண்டுவிடுகிறார்கள். இதன் காரணமாக ஆண்கள், பெண்கள் தேகம் வெளுத்து,வாடி, வருந்தி வலுவற்று விடுகின்றனர். ஆகாரம், மைதுனம் ,நித்திரை, பயம் இந்த நான்கிலும் அதிக ஜாக்கிரதையாக இருபாலரும் இருத்தல் அவசியம்.


இதில் பாதிப்பு ஆண்களுக்கே அதிகம். பகற்பொழுதில் ஒருக்காலும் ஒன்று சேருவது கூடாது. இதனால் ஆண்களின் வீரியம் பங்கம் உண்டாகும் என்று இராமலிங்க ஸ்வாமிகள் சொல்லியுள்ளார். ஆகாரம், மைதுனம் ஆகிய இரண்டிலும் மிக்க ஜாக்கிரதையாக இருத்தல் அவசியமாகும். இல்லை எனில் தேகமானது அதி சீக்கிரத்தில் கூற்றுவனுக்கு இரையாகிவிடும் என்றும் இராமலிங்க ஸ்வாமிகள் கூறுகிறார். சுக்கிலமாகிய திரியை விசேஷமாக தூண்டி, அடிக்கடி சுக்கிலத்தை வீணே செலவு செய்தால், திரியானது அணைந்து போய், ஆயுளாகிய பிரகாசத்தை பாழ்படுத்திவிடும் .


960 நாழிகைக்கு ஒருமுறை தேக சம்பந்தம்?  செய்து சுக்கிலத்தை வெளிப்படுத்தி விடவேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.60 நாழிகை என்பது ஒரு நாள் .960 நாழிகை என்பது 16 நாளாகும் இந்த கணக்குப்படி மாதம் இரண்டுமுறை மட்டுமே தனது நன் மனையாளை மருவுதல் வேண்டும். இதற்க்கு மேற்படின், பல பிணிகளுக்கு உள்ளாக நேரிடுமென்றும், ஆண்களுக்குரிய வீரியமும், விறைப்பும் குறைந்து தளர்ச்சி உண்டாகி உடல் ரோகம் உண்டாகுமென்கிறது சாஸ்திரம். பெண்களுக்கு அடிக்கடி சேருவதால் கருப்பையில் பிணி உண்டாகுமென்றும், ருதுவில் பிரச்னையும் எற்படுமென்கிறது சித்த சாஸ்திரம்..


சுத்த இரத்தம் 60 துளிகள் கொண்டது ஒரு துளி விந்துவாகும். ஆண்கள்

வீரியத்தை பலமுறை வெளியேற்றினால் அது எவ்வளவு இரத்தம் குறையுமென்று இதன் மூலம் அறியலாம். இவ்வாறு அபரிமிதமான இத்தம் குறையவே ஜீவாக்கினி குறைகிறது. ஜீவாக்கினி குறையவே தேக உறுப்புக்களின் சுபாவத் தொழில் கெட்டு, அதனால் தேகம்

தளர்ந்து, முகம் வெளுத்து, கண்ணின்தகுதி குறைந்து கண்பார்வை மங்கி, ஜீரண சக்தி குறைந்து, ஞாபக சக்தி குறைந்து,மொத்தத்தில் பலவீனமாகி, கைகால்கள் நடுக்கம், மூட்டு வீக்கம் உண்டாகி, நடைதளர்ந்து சோர்ந்து, பல தீராத வியாதிகளுக்கு மனிதன் தள்ளப்படுகிறான்....


எனவே தம்பதிகள் இந்த நடைமுறையை கையாண்டால் தேக சௌக்கியமுடன் நல்ல குழந்தைகளை பெற்று வாழ்வில்

நலமடைவார்களென்று சித்த நூல்கள் கூறுகிறது.


ஆரோக்கியமான குழந்தை பெற திருமூலர் சொன்ன அபூர்வ ரகசியம்:

----------------------------------------------------------------------------------------------------------------


மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 ஆகிய நாள்களில் உடலுறவு கொண்டால் மட்டுமே குழந்தை பிறக்கும். இவையே கருத்தரிப்பிற்கு உரிய நாள்கள். 


சிலருக்கு திருமணமாகி சில ஆண்டுகள்

ஆகியும் குழந்தை பிறப்பதில்லை.

குழந்தை பிறக்காததற்கு பல காரணங்கள் உண்டு. ஆண்களின் விந்தில், உயிரணு இல்லாமல் இருத்தல் அல்லது உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாய் இருத்தல். பெண்ணின் கருக்குழாயில் அடைப்பு அல்லது கருப்பை பாதிப்பு.


பொதுவாக, குழந்தை இல்லை யென்றதும் பெண்தான் காரணம் என்று ஆண் மறுமணம் செய்து கொள்கிறான். இது தப்பு மட்டுமல்ல குற்றமும் ஆகும்.

குழந்தை இன்மைக்கு பெண்ணைக் காட்டிலும் ஆணே பெரும்பாலும் காரணம். எனவே, இருவரும் சோதனை செய்து யாரிடம் குறை என்று கண்டு அதைச் சரி செய்ய வேண்டும். பெரும்பாலும் சரி செய்துவிட? முடியும். அந்த அளவிற்கு மருத்துவம் வளர்ந்துள்ளது. 


உடலுறவு மூலம் சிசு உண்டாக நல்ல

நேரங்கள்: 

                   கணவனும், மனைவியும் கூடிய நேரம் சந்திர கலையாக இருந்தால் அந்தக் கரு பெண் ஆகும்.சூரிய கலை நடக்கும் பொது உடல் உறவு கொண்டால் அந்த கரு ஆண் ஆகும்.


சுழிமுனை நடக்கும் போது உறவுக்கொண்டால் குழந்தை ஆகாது

அமாவாசையன்று கருவானால் கருப்பு

நிறமாகவும், ஆறு விரல் உள்ளதாகவும்

குழந்தை பிறக்கும். தொலை தூரம் சென்று வந்த பொழுது உறவுக்கொண்டு கருவானால் அந்தக் குழந்தை அறிவில்லாத குழந்தை ஆகும்.


அமாவாசை கழித்து பிரதமையில் கரு

உண்டானால் பொய் பேசும் குழந்தை பிறக்கும் அமாவாசைக்கு மூன்றாம் நாள் கருவானால் அந்த குழந்தை நீண்ட நாள் வாழாது.


முழு நிலவுவில் உடலுறவு கொண்டு

கருவானால் முடமாகவும், தண்டியாகவும்

குழந்தை பிறக்கும்.யானை வடிவில் இருக்கும். முழுநிலவு கழித்துப் பிரதமையில் கருவானால் சிறு வயதில் பல கண்டங்களைத் தாண்டி, நீண்ட ஆயுள் உடையதாகக் குழந்தை பிறக்கும்.


புணர்ச்சியின் போது பேசக்கூடாது. பேச்சுக்களைப் பேசினால் குழந்தை அலியாகப் பிறக்கும். பெண்ணை நிர்வாணமாக்கிப் புணர்ந்தால்

குழந்தை சோம்பேறியாகப் பிறக்கும். உடலுறவு கொள்ளும் பொழுது வேறு

பெண்ணை நினைத்து உடலுறவு கொண்டால் அதற்குப் பிறக்கும் குழந்தை ஆறு அல்லது நான்கு விரல் உடையாதகப் பிறக்கும்.


குழந்தை பெற உரிய நாட்களில் உடலுறவு கொள்ளாமையும் குழந்தையின்மைக்கு ஒரு காரணம். எனவே, அந்த நாள்களை அறிந்து உடலுறவு கொள்ள வேண்டும்.


மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 ஆகிய மூன்று நாள்கள் உடலுறவு கொண்டால் குழந்தை பிறக்கும். 


அதிலும் குறிப்பாக 14, 15 ஆகிய இரு நாள்களும் மிகச் சரியான நாள்கள். காரணம் 14, 15ஆம் நாள்களில்தான் பெண்ணின் சினையணு கருவுற தயார்நிலையில் இருக்கும். இந்த நாள்களுக்கு முன்னோ பின்னோ

உடலுறவு கொள்வதால் குழந்தை பிறக்காது. இந்த உண்மை தெரியாததால் குழந்தை பிறப்புத் தள்ளிப் போகிறது.


குழந்தை வேண்டாம் என்பவர்கள் மாத விலக்கு வந்தபின் 11, 12, 13, 14, 15 ஆகிய நாள்களில் உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.


14, 15ஆவது நாள்கள்தான் உரிய நாள்கள் என்றாலும், 11, 12, 13 நாள்களில் உடலுறவு கொள்ளும்போது வெளியேறிய விந்து பெண்ணுருப்பில் ஓரிரு நாள்கள் உயிர்வாழும். அதிலுள்ள உயிரணு மூலம் குழந்தை பெற வாய்ப்பு வரும். அதனால், 11, 12, 13 ஆகிய

நாள்களும் விலக்கப்பட வேண்டும். பருவமடைந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இதை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்த விவரம் அறிந்திருந்தால்

தேவையில்லாமல் பெண் கருவுறவும்,

கருக்கலைப்புச் செய்து உடல் பாதிக்கவோ வேண்டிய நிலை வராது.

பன்னிரெண்டாவது நாள் கூடிக் கருவானால் பல கலைகளும், அறிவு நலன்களும் உள்ள குழந்தை பிறக்கும். பதின்மூன்றாவது நாள் கூடிக் கருவானால் அரசியல் ஞானம், வருங்காலத்தை உணரும் விவேகம் உள்ள குழந்தை பிறக்கும்.


பதிநான்காம் நாள் கூடிக் கருவானால் உலக இன்பங்களிலிலே திளைக்கின்ற யோகியாகக் குழந்தை பிறக்கும். பதினைந்தாவது நாள் கூடிக் கருவானால் ஓர் அரசனுக்கு ஒப்பான ஆற்றலும், நற்புகழும் உள்ள குழந்தை பிறக்கும். பதினாறாவது நாள் கூடிக் கருவானால் பெரிய ஞானியாகவும், யோகியாகவும், சித்தனாகவும் ஆகக்கூடிய குழந்தை பிறக்கும்.


அவசரமில்லாத தொடக்கமே ஆரோக்கியத்திற்கு வழி:

------------------------------------------------------------------------------

அவசரம் வேண்டாம் திருமணமான தினத்தன்று காலையில் முகூர்த்தம் முடிந்த உடனே இரவு நடக்கப்போகும் சாந்தி முகூர்த்தம் பற்றி பேசி புதுமணத் தம்பதிகளை திகிலில் ஆழ்த்துபவர்கள் தான் அதிகம் பேர் இருப்பார்கள். ஆனால் அவசரப்படாமல் ஆற அமர முதலிரவை வைத்துக்கொண்டால்தான் அது சுக இரவாக இருக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்....


 தம்பதியர் முதன் முதலில் சந்தித்துக்கொள்ளும் இரவில் அதாவது முதலிரவில் நிம்மதியாக இருவரும் தூங்குங்கள் என்பதுதான் உளவியலாளர்கள் மற்றும் மருத்துவர்களின் அறிவுரை. அடப்போங்க சார். யாருக்காவது முதலிரவில் தூக்கம் வருமா? என்று கேட்பது காதில் விழுகிறது. வேறு வழியில்லை கண்டிப்பாக அன்றைய தினம் தூங்கினால்தான் தொடரும் நாட்களில் சிக்கல் இல்லாமல் வாழ்க்கையை சந்திக்க முடியும் என்கின்றனர்.


 ஏனெனில் என்னதான் சுற்றம் சூழ தாலி கட்டி மனைவி ஆக வந்து விட்டாலும் சந்தித்த முதல் நாளன்றே தாம்பத்ய உறவை தொடங்குவது சரியில்லை என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்து. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள்முதல் சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரில் ஆண், பெண் இருவருக்குமே ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். திருமண தினத்தற்கு வீட்டிலும், சத்திரத்திலும் ஒரே கூட்டமும் கும்மாளமுமாய், இருந்திருக்கும். 


தண்ணீர் மற்றும் கழிவறை பிரச்சினையினால் அவசரக்குளியல் என இருவரின் உடல்களுமே சுத்தமாக இருக்காது.  இதனால் பரவும் நோய்களும் அதிகம், இதனால் தான் திருமண தினத்தன்றே தாம்பத்ய உறவை வைத்துக்கொள்வது ஆரோக்கியமானதல்ல என்கின்றனர் மருத்துவர்கள்.


ஹனிமூன் நோய்கள் முதல்நாளே உறவைத் துவங்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸிசஸ் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாம். பிறப்புறுப்பை பாதிக்கும் பல வியாதிகள் வர? வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். அவசர கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் இந்த வியாதிகள் கட்டாயம் வருமாம்.


முதலிரவன்று இதமான வெந்நீரில் நன்றாக குளியுங்கள். ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளை தவிருங்கள். அளவோடு மிதமான உணவாக உட்கொள்ளுங்கள். அன்றைய தினம் சம்பிரதாயத்திற்காக வைக்கும் பால், பழம், இனிப்புகளை சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. உடலும் மனமும் லேசாக இருந்தலே பாதி டென்சன் பறந்துவிடும்.


அன்பை பரிமாறும் வழி

முதல்நாளன்றே ஒருவருக்கொருவர் தம்மை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் எதையாவது செய்யப்போய் அதுவே சிக்கலாகிவிடும் ஜாக்கிரதை. இதனால் இருவருக்குமிடையே அதிருப்தி உருவாகலாம். எனவே முதலிரவன்று புதுமணத்தம்பதியர் இருவரும் மனம் விட்டுப்பேசிக்கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக்கொள்ளலாம். விருப்பு, வெறுப்பு, குடும்ப சூழ்நிலை, பற்றியெல்லாம் பேசலாம்.


சின்னத் தொடுகை. மெல்லியதாய் ஒரு ஸ்பரிசம், போதும் அதுவே ஆயிரம் மடங்கு அன்பை இருவருக்குமிடைய உணர்த்துவதற்கு. தயக்கமும், கூச்சமும் களைந்த பின்பே தாம்பத்ய உறவை தொடங்குவதே ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படை என்கின்றனர் மருத்துவத்துறையினர். இந்த கட்டுரை பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்து திருமணம் செய்து கொண்டவர்களுக்கு மட்டுமல்ல. காதல் திருமணம் செய்பவர்களுக்கும் பொருந்தும்.

எனவே முதலிரவை, ஒரு நீ்ண்ட இனிய நாவலின் முன்னுரையாக கருதி நிதானமாக ஆரம்பியுங்கள். பிறகு பாருங்கள், வாழ்க்கை நாவலின் ஒவ்வொரு பக்கமும் படிக்கப் படிக்க இனிமையாக இருப்பதை உணர்வீர்கள்.



ஆழ்மனதைப் பற்றி ஓர் ஆய்வு.

 வெற்றி பெற முழுக்காரணம் ஆழ்மனம் தான்......


ஆழ்மனதைப் பற்றி ஓர் ஆய்வு. 


நமது ஆழ்மனம் நாம் விரும்பும் எதையும் நமக்கு கொடுக்கவல்லது! மனத்தில் இரண்டு நிலைகள் உண்டு.

(1) மேல் மனம் அல்லது வெளிமனம்.

(2) ஆழ்மனம்.


மனமென்பது ஆர்டிக் கடலில் மிதக்கும் பனிப் பாறைகளைப் போன்றது. கடலுக்கு மேல் கண்ணுக்குத் தெரிகின்ற 20% பனிப்பாறையைப் போன்றது மேல் மனம். கடலில் மூழ்கியிருக்கின்ற கண்ணுக்குத்த தெரியாத 80% பனிப்பாறையைப் போன்றது ஆழ்மனம்.


மேல்மனத்தை விடப் பல மடங்கு பெரியதும், ஆற்றல் மிக்கதும் ஆழ்மனம் ஆகும். மேல்மனம் என்பது விழிப்பு, உணர்வு நிலை எனப்படும். நினைவு நிலைக்கு இதுவே காரணமாகிறது. ஆனால் ஆழ்மனம் துயில் நிலைக்கும், துயிலுக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட மெய்மறதி நிலைக்கும் காரணமானது!


நாம் படிப்பதும், பேசுதலும், செயல்படுவதும் மேல் மனத்தின் மூலமாகத்தான், ஆனால் என்ன படிக்கிறோம், ஏன் – எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம், ஏன் – எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம் காரணம் அடிமனம் தான் (ஆழ்மனம்)


எனவே நமது குறிக்கோள்களை நமது அடிமனம் ஏற்றுக்கொள்ளுமாறு எண்ணங்களைச் செலுத்த வேண்டும். நாம் செய்ய வேண்டியது இதுதான்.

(1) நமது ஆழ்மனத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும்.

(2) உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள்கள் என்ன என்பதை ஆழ்மனதிற்கு தெரிவிக்க வேண்டும்.


உங்கள் குறிக்கோள்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட ஆழ்மனம், அந்த குறிக்கோள்களை விரைவில் அடைய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, உடனே உங்களைச் செயல்படுத்த தூண்டும்.


நமது குறிக்கோள்களை ஆழ்மனத்திற்கு எப்படி கொண்டு செல்வது:


(1) நமது எண்ணங்கள் எல்லாம் நமது குறிக்கோள்களைப் பற்றியதாகவே இருக்க வேண்டும்.


(2) ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட வேளையில் (காலையில் 15 நிமிடங்கள்) குறிக்கோளை அடைவதற்கான மனப்பயிற்சியை செய்துவர வேண்டும்.


(3) நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், கண்ட குப்பை எண்ணங்களை எண்ணாமல், நமது குறிக்கோளைப் பற்றிய எண்ணங்களாகவே நினைக்க வேண்டும்.

                      உதாரணமாக வீடு வேண்டும் என்றால் அந்த வீட்டில் (கற்பனை வீட்டில்) எத்தனை அறைகள் இருக்க வேண்டும். அதனுடைய அளவுகள் எப்படி இருக்க வேண்டும், எந்த அளவில் கதவுகள், வர்ணங்கள் என்ன என்பதை பற்றிய கற்பனைகளையே உங்களது எண்ணம் முழுவதும் நிரம்பியிருக்க வேண்டும்.

       நமது முன்னால் குடியரசுத் தலைவர் திரு ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் கூட இதன் அடிப்படையில் தான் "கனவு காணுங்கள்" என்று சொன்னார்.


(4)  உங்கள் மனதில் குறிக்கோள் விதையை வலுவாக ஊன்றுங்கள். அதை உங்களது தீவிர எண்ணங்களால் உரமேற்றுங்கள். நிச்சயம் உங்களது குறிக்கோளை அடைந்துவிடுவீர்கள். விதைத்ததையே அறுவடை செய்து விடுவீர்கள் என்பது நிச்சயம்.


(5) உங்களது கற்பனையில் உங்களது குறிக்கோளை ஒரு படமாக மாற்றி அதை உங்கள் மனத்திரையில் ஓட்டிப் பார்க்க வேண்டும். என்ன நினைக்கிறீர்களோ அதை அப்படியே செய்து முடிப்பதாக நினைக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு புதிய வீடு கட்ட வேண்டும் எனில், கற்பனையில் வீடுகட்டி அதற்கு கிரகப்பிரவேசமும் செய்து முடித்ததாக எண்ண வேண்டும். உங்கள் கற்பனை எண்ணங்கள் மேலோங்கி, எண்ணங்கள் வலுப்பெற்று அது உண்மையாகவே நடக்க ஆரம்பித்துவிடும்.


(6)  குறிக்கோள்களை அடைவதற்கு, தற்காலத்தில் அனுபவிக்கக் கூடிய சிறுசிறு சுகங்களை தியாகம் செய்யவும் தயங்கக் கூடாது.


(7) உங்கள் ஆழ்மனத்தை, பிடிவாதத்துடன் நம்ப வைத்துவிடுங்கள். ஆழ்மனம் வெகு சீக்கிரம் உங்கள் குறிக்கோளில் கொண்டு சேர்த்துவிடும்.


(8) உங்களது குறிக்கோளை தெளிவாக ஒரு அட்டையில் எழுதி / உங்கள் கண்களில் அடிக்கடி படும்படியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதைப் பார்க்கும் போதெல்லாம், எண்ணங்கள் உங்கள் குறிக்கோளின் மீது குவியட்டும்.

       எனவே நாம் நமது குறிக்கோளைத் தெளிவாக ஒரு காலவரையில் முடித்தே தீருவேன் என்று முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். பின்பு ஆழ்மனத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். 


ஆழ்மன எண்ணங்களே ஒருவரின் நிஜங்கள்!!!


பழக்கங்கள் உருவாகி பலப்படும் இடம் ஆழ்மனம் தான். அது மட்டுமல்ல ஒரு மனிதனின் வெற்றி தோல்வியையும், அவன் பலங்கள் பலவீனங்களையும் தீர்மானிப்பது அவன் ஆழ்மன நிலையே தான். ஏன் ஒருவர் இன்று எப்படி இந்த உலகில் வாழ்கிறார் என்பதைத் தீர்மானிப்பதும் ஆழ்மனமே.


ஆழ்மனதில் எதை மனிதன் நம்புகிறானோ அதுவே அவனுக்கு உண்மையாகிறது . 

 

நாம் பல சமயங்களில் நம்மை அறியாமலேயே சுயமாக நம்மை நாமே ஹிப்னாடிசம் செய்து கொண்டு கருத்துகளைப் பதிவு செய்து கொண்டு விடுகிறோம். அது போல சில சமயங்களில் நாம் மிகவும் நம்பும் அல்லது மதிக்கும் மனிதர்களை நம்மை ஹிப்னாடிசம் செய்து கருத்துகளை நம் மனதில் பதிக்க அனுமதித்து விடுகிறோம். அந்தக் கருத்துகள் உயர்ந்ததாகவும், பலம் வாய்ந்ததாகவும் இருக்கும் போது நாம் சாதனையாளர்கள் ஆகிறோம். மாறாக அவை தாழ்ந்ததாகவும், பலமிழந்தும் இருக்கிற போது தோல்வியாளர்களாகவும் மாறி விடுகிறோம்..


ஆழ்மனம் எதையும் மேல்மனம் தந்தபடியே எடுத்துக் கொள்கிறது. தினந்தோறும் நூற்றுக் கணக்கான தகவல்களை மேல் மனம் தந்தபடி இருக்க அவற்றை ஆழ்மனம் மனதில் பதித்துக் கொண்டும், ஒழுங்கு படுத்திக் கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது. 


ஓரிரு எண்ணங்கள் தவறாகவும், பலவீனமாகவும் உள்ளே செல்வதில் பெரிய பாதிப்பு இருக்காது. தொடர்ந்து அதே போல் எண்ணங்கள் ஆழ்மனதில் பதிய ஆரம்பித்தால் தான் பிரச்னை. 


எனவே மேல்மனம் எடுத்து உள்ளே அனுப்பும் தகவல்களில் மிக கவனமாக இருங்கள். மேல்மனம் அனுப்பும் தகவல்கள் தொடர்ந்து பயம், பலவீனம், கவலை, தாழ்வு மனப்பான்மை கொண்ட எண்ணங்களாக இருந்தால் அவை பலப்பட்டு அப்படியே பதிவாகி அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகளாக உங்கள் வாழ்வில் கண்டிப்பாக வரும். அதற்கு எதிர்மாறாக தைரியம், வலிமை, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற தகவல்களாக மேல்மனம் உள்ளே தொடர்ந்து அனுப்பினால் அதுவும் அப்படியே உங்கள் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும் என்பது உறுதி


மனோசக்தியே மந்திரசக்தி.

-------------------------------------------------


எப்படி நமது நாட்டில் பலர் ஏழைகளாக இருப்பதற்கும், சிலர் சுகமாக எல்லா வசதிகளுடன் வாழ்வதற்கும் காரணம், அவர்கள் படிப்பில்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான். அந்தப் படிப்பைப் பெற்றவர்கள்கூட படிப்பிலே எது முக்கியம் என்று தெரிந்து கொள்வதில்லை. அந்த முக்கியமான விஷயம்தான் தியானம். இன்று அமெரிக்காவில் பல பல்கலைக் கழகங்களில் இது சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஊருக்கு ஊர் தியானம் சொல்லிக் கொடுக்கும் சங்கங்கள் இருக்கின்றன.


ஒரு மனிதன் செல்வந்தனாக இருப்பதற்கும் மற்றொருவன் ஏழையாகவும் வாழ்வதற்கும்

காரணம், அவர்கள் மனதில் கொண்டிருக்கும் எண்ணங்கள், ஆசைகள்தான் என்று மனவியல்

அறிஞர்கள் கூறுகிறார்கள். அதேபோல அந்த ஆசைகளை எப்படி சீர்படுத்தி, வாய்க்கால் வெட்டி, பாத்தி கட்டி

செலுத்துகிறோம் என்பது அதைவிட முக்கியம். இதைத்தான் மனதை ஒருமுகப்படுத்துதல் என்பார்கள்.


பூதக் கண்ணாடியைப் பார்த்திருப்பீர்கள். கீழே ஒரு தாளை வைத்து பூதக் கண்ணாடியை சூரியனுக்கு எதிராகப் பிடித்தால், சூரியக் கதிர்கள் ஒருமுகப்பட்டு தாள் எரியத் தொடங்குகிறது. பூதக் கண்ணாடி சூரிய சக்தியை ஒருமுகப்படுத்துகிறது ஒருமுகப்படுத்தும்போது சக்தி

அதிகமாகிறது. வலிமை, எரிக்கும் சக்தி அதிகமாகிறது.


இப்படி நம் மனசக்தியை ஒருமுகப்படுத்தும் மார்க்கங்களைத்தான் "ஜெபம்" என்றும் "தியானம்" என்றும் சொல்கிறோம். உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை "ஜெபம்"  என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை "தியானம்" என்றும் சொல்கிறோம். யோகிகள் மனதை ஒருமுகப்படுத்த சில மந்திரங்களை

இரகசியமாகச் சொல்லிக் கொடுப்பார்கள்.


எந்த எண்ணமும் மனதிற்குள் இரகசியமாக வைக்க வைக்க, அதற்கு வலிமை அதிகமாகிறது. இதுதான்

இரகசியமாகச் சொல்வதன் காரணம்.


மந்திரம் என்று எதைச் சொல்கிறார்கள்?ஆழ்மனம் திரும்பத் திரும்பச் சொல்வதுதான் மந்திர சக்தியை ஏற்படுத்துகிறது. எதைத் திரும்பச் சொல்கிறோமோ அதன் பொருள் நம் ஆழ்மனதில் பதிந்து நமக்கு எப்போதும் மந்திர சக்தி உதவத் தயாராயிருக்கிறது.

"வழிகாட்டு" என்று முறையிட்டோமானால் நமக்கு வழிகாட்டும்.


திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் விஷயங்கள் ஆழ்மனதிற்குப் போகின்றன. ஆழ்மனதில் போடப்பட்ட விஷயங்களை ஆழ்மனம் நிறைவேற்றி வைக்கிறது. இதுதான் உண்மை.


முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரான்சு நாட்டு மருத்துவர், "நான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையிலும்? முன்னைவிட ஆரோக்கியமானவனாக இருக்கிறேன்" என்று நோயாளிகள் திரும்பத் திரும்பச் சொல்லச் செய்ததன் மூலம்

அவர்களது நோயைக் குணப்படுத்தினார். இது இன்னும் "நமக்கு நாம் சொல்லிக் கொள்ளுதல்" என்ற தத்துவத்தின் கீழ் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.


இப்படியாக மனதை ஒருமுகப்படுத்தும்

பழக்கந்தான், நாளைக்கு நாம் ஒரு வேலையைச் செய்யும்போது மனதை அந்த விஷயத்தில் ஒருமுகப்படுத்துவது எளிதாகிறது. இதனால் முயற்சிகள் வெற்றியடைகின்றன.


ஜெபம், தியானம் (திக்ரு)மூலம் மனதை ஒருமுகப்படுத்தும் திறனையும், நம் ஆசைகளை, இலட்சியங்களை, ஆழ்மனதிற்கு அனுப்பி வைக்கும் முறையையும் கற்றுக் கொள்கிறோம்.


சுயகட்டுப்பாட்டின் முக்கியமான பாடம் இதுதான். இதை விடாது நீங்கள் பயிற்சி செய்து  பார்த்தீர்களானால், அதி ஆச்சரியமான நிகழ்ச்சிகள் உங்கள் வாழ்வில் நேர்வதைப் பார்ப்பீர்கள்;

வெற்றி உங்கள் கைக்குள் வந்து சேரும்.


இதுவே இத்தனை நாள் அதிகம் பேருக்கு சொல்லிக் கொடுக்கப்படாத இரகசியமாக இருந்தது.


ஆழ்மனம் என்பது நம்மில் உள்ள மிகப்பெரிய சக்தி (காஸ்மிக் எனர்ஜி). ஆழ்மனம் எப்பொழுது திறக்கும் துக்கமும் இல்லாமல் விழிப்பும் இல்லாத நேரத்தில் திறக்கும். இதன் முலம் நமக்கு பிரபஞ்சசக்தி கிடைக்கும். இந்த பிரபஞ்சத்தில் ஏராளமான சக்திகள்

உள்ளன. அவற்றில், ஒன்று காஸ்மிக் energy. இதைப் பயன்படுத்தி நமது ஆசைகளை நாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.இந்த காஸ்மிக் சக்தியைப் பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் நமது ஆழ்மனத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.


ஆழ்மனதை நமது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர நாம் தினமும் தியானம் செய்துவர வேண்டும். இதன் மூலம் மிக எளிய முறையில் லட்சியங்களை நிறைவேற்ற முடியும்.


லட்சியகள் மட்டும் அல்ல நாம் நோய்களையும் குணப்டுத்தமுடியும், மற்றவர்களின் ஆழ்மனதுடனும் உரையாடமுடியும்.


வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம்

-------------------------------------------------------------------


பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை.

ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப்பிறந்தோமா? என்று....


நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபின் நாம் செய்யவேண்டியது ஒரு சிறு விஷயம்தான் மாற்றம். அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும்,

நம் அன்றாட செயல்களிலிருந்தும் ஆரம்பமாக வேண்டும்.


மாற்றங்களை விரும்பாத எவரும்

மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. மாறாத, மாறவிரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை. இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்.


ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம்ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.


சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு

கோள்களில் (புளூட்டோ குள்ளக்கோள்) பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத்

தகுதி வாய்ந்தது. பூமியானது எந்தப் பிடிமானமுமின்றி தன்னைத்

தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது.


ஆனால், "பூமி சுற்றுவதை உணர

முடிவதில்லை. நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அது உண்மை. அதேபோல் நம் ஒவ்வொருவரிடமும் சக்தி உள்ளது. இதை உணர முடிவதில்லை. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இதுவும் உண்மை." சூரியன் தன் ஈர்ப்புச்சக்தியினால் எட்டு கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்த சக்தி சூரியனுக்கு எங்கிருந்து வந்தது?


சூரியனுக்கு அச்சக்தி கொடுத்த

பிரபஞ்சம்தான். நம் அனைவருக்கும்

சக்தியை அனுதினமும் கொடுத்துக்

கொண்டிருக்கிறது.


பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதுமாகஅறிந்தவர்களில்லை. எனினும் சிறு துளிகள். நாம் உயிர் வாழும் பூமி போன்ற பல கோடிக்கணக்கான கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலமும் கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுப்பும் சேர்ந்தது அண்டம் ஆகும். பல கோடிக்கணக்காக அண்டங்களின் தொகுப்பே, பேரண்டம் பிரபஞ்சம் எனப்படுகிறது. மனிதனின் கற்பனைக்கும் எட்டாத ஒன்றுதான் பிரபஞ்சம்.


கற்பனையே செய்ய முடியாத பிரபஞ்சத்தின் ஒரு சிறுபகுதிதான். நாம் உயிர் வாழும் பூமி.


இந்த பூமியை இயக்கிக்கொண்டிருப்பது பிரபஞ்ச சக்தி ஆகும். இதே பிரபஞ்ச சக்திதான் பூமியில் வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கிறது. இருக்க நினைப்பவர்களுக்க வசிக்க இடம்

கொடுக்கிறது.


இந்த பிரபஞ்ச சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம் ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு நொடியும் அளப்பரிய சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.


ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை. மனித மனம்தான் அறிவுமனம் ஆழ்மனம் என்று இருவிதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.


"உருவமே இல்லாத ஆழ்மனம்தான் இந்த உலகத்தை உருவாக்குகிறது. அடையாளம் காண முடியாத ஆழ்மனம்தான் நம்மை இந்த

உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அறிய.முடியாத ஆழ் மனம்தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது."  இதுவரை நாம்

வாழ்ந்த நாட்களுக்கும், இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும்.


இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பிடித்திருந்தாலும்.பிடிக்காதிருந்தாலும் அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது தான்!


ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது?


இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்லமுடியும். நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே. ஆம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே. எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும்.


நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.


நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே

ஆகிறோம். காரணம் நம் ஆழ்மனம். நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள்தான் நம் ஆழ்மனம்.


நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம் எண்ணங்களை சீர் செய்வதுதான். அந்த எண்ணங்களுக்கு உருவம்  கொடுப்பதுதான்.


ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது. நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்துப்பார்க்கத் தெரியாது. எண்ணத்தை வலிமைப்படுத்துவதுதான் ஆழ்மனதை வசியப் படுத்த ஒரே வழி.


ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம்.....



Tuesday, December 7, 2021

ஜீவ யோகம்

 


....

வாழ்வில் சுவராஷ்யம் எது..?

....

அறுசுவையில் 

ஒரு சுவை கூடுவதும் சுவராஷ்யம்


கூடிய அச் சுவை 

சுமையாகி போவதும் சுவராஷ்யம்


அறுசுவையும் அளவாக இருப்பது 

ஒரு சுவராஷ்யம்


இன்பம் 

துன்பம் 

உழைப்பு

ஓய்வு

அதிக பேச்சு

மௌனம் 


இந்த ஆறும் அறுசுவையே


உழைத்து கலைத்தவனுக்கு

ஓய்வு ஒரு சுவராஷ்யம்


ஓய்விலே ஒயாமல் இருப்பவனுக்கு

உழைக்க வாய்ப்பு வருவதும் சுவராஷ்யம்


இன்பத்தை அனுபவிப்பவனுக்கு

ஒரு சுவராஷ்யம்..

அதன் விளைவாக வரும் 

துன்பமும் ஒரு சுவராஷ்யம்.


அளவுக்கு அதிகமாக பேசுபவனுக்கு

அதிலும் ஒரு சுவராஷ்யம்..


அந்த அதிக பேச்சுக்கு அடுத்து வரும் 

மௌனமும் ஒரு சுவாரஸ்யம் 

...


சுவராஷ்யத்தில் இருக்கும் சுவரஷ்யம்

எது என்றால் 


ஒருவன்  அவனுக்கு பிடித்த

ஒரு வகையான சுவாரஷ்யத்தை

தேடி ஓடுகிறான்


அப்படி ஓடியவனுக்கு

காலம் எதிர்மறையான ஒரு சுவாரஷ்யத்தை பரிசாக கொடுக்கும். 

....

*அன்பு* என்னும் சுவராஷயம் தேடி ஓடுபவனுக்கு

காலம் 

*பகை* என்னும் சுவராஷ்யத்தை

பரிசாக கொடுக்கும். 


*இன்பத்தை* தேடி ஓடுபவனுக்கு

காலம் 

*துன்பத்தை* பரிசாக கொடுக்கும்


வாயை மூடாமல் பேசுபவனுக்கு

காலம் 

மௌனத்தை பரிசாக கொடுக்கும்.


இதில்  செம சுவராஷ்யம் 

எது  என்றால் 

காலம் 

அவனை சமன் பண்ணவே

எதிர்மறையான சுவராஷ்யத்தை

கொடுக்கிறது .

காலத்தின் சமண் செய்யும்

ஒரு அன்பு முயற்சி இது

என்பதை கூட அறியாமல் 

மீண்டும் 

அவன் 

அவன் தேடிய 

அன்பு

இன்பம் 

அதிக பேச்சு 

ஆகிய சுவராஷ்யத்தை நோக்கியே

ஓடி கொண்டு இருப்பதுதான். 


அதன்

விளைவு 

காலம் 

அவனுக்கு 

*சமணன் முத்திரையை*

இறுதியாக அவனுக்கு

வரமாக கொடுத்து

அவனை சரி செய்ய போராடும். 


காலத்தின்

அந்த சமண முத்திரையின்

சுவராஷ்யம் 

*பைத்தியம்* ஆவதே.

....

*உடலும்* 

*காலமும்* 

ஒருவனுடன் தொடர்பிலே இருக்க 

முயல்கிறது 

அவன் உடலில் 

உயிர் இருக்கும் வரை 


*சுடாகி* போன உடலுக்கு 

தாகமாக *தண்ணீர்* கேட்பதும்.. 

*சக்தி* இழந்த செல்கள் 

பசியாக *உணவு* கேட்பதும்..

உழைதுத்து ஓடிய தேகத்திற்கு

தூக்கமாக ஓய்வை கேட்பதும்..

ஆரோக்யம்,நலிவுற்ற உடல் 

பசியாமையால்

உணவை வேண்டாம் என்பதும்..

ஒரு உடல் 

அவனோடு சுவர்ஷயமாக 

உறவாட முன் வருகிறது என்பதே.

...

காலமும் 

இன்பம் அளவுக்கு அதிகமாகும் போது

அதை சமண் செய்ய 

துன்பத்தை கொடுப்பதையும்..

அளவுக்கு அதிகமாக 

மன

உறவு வளரும் போது அதை சமண் செய்ய 

பகையை கொடுப்பதும்.


அதையும் மீறி 

ஒருவன் உடலோடு

காலத்தோடு, ஒத்துவரவில்லை

என்றால் 

காலம் 

தீரா 

பஞ்ச கர்ம நோயை பரிசாக கொடுத்து 

மரணம் மூலம் 

அவனை சமண் செய்வதும்

காலத்தின் சுவராஷ்யமே

....

பிறவியில் 

மிக பெரிய சுவராஷ்யம் எது..?


ஒருவனை 

அவனை 

சமண் செய்ய 

*காலமும் *

*உடலும்* முயற்சி செய்கிறது..

இதுவே 

*சிவ முயற்சி*

...

அந்த 

சிவ முயற்சியை உணர்ந்தவனை

உடலும். காலமும்  ஆசிர்வதிக்கும்.


*ஜீவ யோகம்* என்பது

எவன் ஒருவன் 

தன்னை சமண் செய்ய 

*காலத்திற்கும் *

*உடலுக்கும்* 

ஒரு வாய்ப்பே கொடுக்காமல்

*தன்னை தானே*

*அறுசுவையில்* இருந்தும் 

*அறு அவஷ்தையில்*  இருந்தும்

*சமண்* செய்கிறானோ

அவனை 

காலமும் 

உடலும் வணங்கும் .,

வரமாக 

காய கல்ப சரீரம் கொடுத்து

உலகில் 

சித்து சிவ ரகசியத்தை 

சிரசிலே மலர செய்து 

பேரின்பத்தை 

வரமும் கொடுக்கும். 

....

பேரிண்பம் எது...?

....

எந்த இன்பம் 

எந்தகைய அளவு தாண்டினாலும்

அதன் விளைவாக 

துன்பம் விளையாமல் 

இன்பம் மட்டுமே விளைகிறதோ

அந்த இன்பமே 

சிவ இன்பம் 

ஜீவ இன்பம் 

பேரிண்பம்.


சிவமுயற்சியை ஜீவம் தன்முயலாக கூட 

ஜீவமும் பேரிண்ப சிவமாகுமே

Saturday, September 10, 2016

இவன் என் பாட்டன் .இவம் வழி வந்தவன் நான்,நான் தமிழன்

கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது....... மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது........ முதல் சுதந்திர போராட்ட வீரன் புலித்தேவனை தெரியாது....... முதல் சுதந்திர போராட்ட வீரமங்கை வேலுநாச்சியாரை தெரியாது....... குல தெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய மரு திருவரை தெரியாது ....... முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் குயிலியை தெரியாது........ டச்சு படையை வென்ற குமரி வர்மக்கலை ஆசான் அனந்தபத்மனாபனை தெரியாது........ ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது ....... ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியை தெரியாது..... ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சியை தெரியாது........ வெள்ளையனை எதிர்த்து வணிகம் செய்த ஒரே சுதந்திர போராட்ட தியாகி சிதம்பரனார் தெரியாது........ இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. இவர்களை போல இன்னும் பல லட்சக் கணக்கான பெயர்கள் உள்ளன. அவர்கள் யாரையும் இன்றைய இளைஞர்களுக்கு தெரியபடாமல் வைத்து வரலாற்றை அழிப்பதே இன்றைய கட்சிகள் செய்த சாதனை.. உங்களை போலவே உங்கள் தலைமுறைகளுக்கும் நம் தமிழனின் வரலாற்றை சொல்லிக்கொடுக்க தயங்கி வரலாற்றை அழித்து விடுங்கள் இதுவே நீங்கள் செய்யும் சாதனையாக இருக்கட்டும்.. 20ஆயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய எம் தமிழ் மொழியை இந்த 20 வருடங்களில் அழித்த பெருமை நம்மையே சேரும்...

Monday, June 6, 2016

அந்தமான் தமிழர்கள் ==================== பர்மாவில் அராகன் மலை. அங்கிருந்து தெற்கு நோக்கிச் சுமத்திரா தீவு வரை நீண்ட நெடிய மலைத் தொடர். அதன் தொடர்ச்சி கடலில் மூழ்கிப் போனது. எஞ்சிய சிகரங்களே இன்றைய அந்தமான் - நிக்கோபார் தீவுகள். சிறிதும் பெரிதுமாக 567 தீவுகள். அந்தமானின் தலைநகர் போர்ட் பிளையர் (Port Blair). கோலாலம்பூரில் இருந்து 1,365 கி.மீ. சென்னையில் இருந்து 1191 கி.மீ. தொலைவு. அந்தமான் தீவில் ஆப்பிரிக்கரைப் போன்ற கருப்பு நில பழங்குடிகள் வாழ்கின்றனர். 'நீக்ரிடோ' இனத்தவர். இவர்களின் ஊர்ப் பெயர்கள், பழக்க வழக்கங்கள், மொழியின் வேர்ச் சொற்கள் போன்றவை தமிழோடு இணைந்து போகின்றன. அந்தமான் என்ற பெயர் தமிழர் கொடுத்தது. மான்கள் நிறைந்து இருந்த காரணத்தால் அந்தப் பெயரில் அழைத்தனர். சோழர்களின் ஆட்சியில் தென்கிழக்காசியா முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதும் வரலாறு. நிக்கோபாருக்குத் தமிழர்கள் வைத்த பெயர் என்ன தெரியுமா. நக்கவரம். அந்தக் காலத்தில் அந்தத் தீவில் வாழ்ந்த மக்கள் நிர்வாணமாக இருந்ததால் அந்தப் பெயர் வைக்கப்பட்டது என்கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அரசியல் கைதிகளுக்கு வாழ்நாள் தண்டணை வழங்கி இங்கு குடியேற்றினர். சிறைச்சாலைக் கட்டுவதற்குச் சென்னையில் இருந்து தமிழர்கள் குடியேறினர். அரசியல் கைதிகளைத் தவிர மற்ற குற்றவாளிகளும் குடியேறினர். கூலித் தொழிலாளர்களாகவும் தமிழர்கள் பெருமளவில் குடியேறினர். அரசியல் கைதிகளில் வங்ளாதேசிகளும், மாப்பிளா கலகத்தில் போராடிய 1400 மலையாள மக்களும் குடியேறினார்கள். 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி வங்ளாதேசிகள் முதலிடம். தமிழர்கள் இரண்டாம் இடம். 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். தீவின் மொத்த மக்களில் இரண்டாம் இடத்தில் தமிழர்கள். இருந்தாலும் தமிழ்க் கல்வியைத் தருவதில் மத்திய அரசு தயக்கம் காட்டி வந்தது. தமிழர்களுக்குத் தமிழ்க் கல்வி கொடுக்காமல் இந்தி பேசும் இந்தியர்களாக மாற்ற வேண்டும் என்பதே அப்போதைய வியூகம். அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் ஆறாயிரம் தமிழ்க் குழந்தைகள் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு 33 பள்ளிகளில் கல்வி பயின்று வருகிறார்கள். அந்தமானில் உயர்க்கல்வி பயில தமிழகத்தையே எதிர்நோக்க வேண்டியுள்ளது. தமிழில் கல்லூரிக் கல்வியோ, பல்கலைக்கழக வசதியோ இல்லை. தமிழரின் எண்ணிக்கையைச் சிதறடிப்பதற்குப் பெரும் முயற்சி நடந்து வருகின்றன. கிழக்கு வங்கப் பிரிவினைக்குப் பின்னர் வங்ளாதேசிகள் கள்ளக் குடியேற்றம் நடந்து வருகிறது. பர்மா, இலங்கைத் தமிழர்களை அந்தமானில் குடியேற்றுங்கள் என்றால் வங்ளாதேசியர் மறுக்கின்றனர். தெற்கு அந்தமானில் தமிழர்களின் வீடுகளையும் விளை நிலங்களையும் வங்ளாதேசிகள் சூறையாடி வருகின்றனர். சூறாவளிப் புயல் மழையில் தமிழர்களின் குடியிருப்புக்கள் நாசம் செய்யப்பட்டன. தீவு ஆட்சியாளரிடம் வீடுகட்ட இடம் கேட்டபோது அவர் சொன்ன பதில்: "உங்களுக்கு வீடுகட்ட இடம் வேண்டுமானால் கருணாநிதியிடம், எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்" என்று அன்றைய தீவின் துணை ஆளுனரே பேசியதாகக் கூறப் படுகிறது. ஆளுனரின் நிலையே இதுவென்றால் மற்ற வங்ளாதேசியர் எப்படி இருப்பார்கள்? ஆனால் இங்கே மலேசியர்கள் வங்காளதேசிகளைச் சகோதரர்கள் மாதிரி பார்க்கிறார்கள். அங்கே அந்தமானில் தமிழர்களை வங்காளதேசிகள் துச்சமாக நினைக்கிறார்கள். தமிழ்ப் பெண்களின் கற்பைச் சூறையாடுகிறார்கள். வங்காளதேசிகளை இங்கே மனித நேயத்துடன் பார்க்கும் கலாசாரத்தை மாற்ற வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். மேலும்: http://ksmuthukrishnan.blogspot.my

Tuesday, November 8, 2011

நேற்றிரவு பெய்த மழை!

தூறும் மழைச்சாரலும்
உன் புன்னகையும்
ஒன்றெனவே தோன்றியது
நம்முடன் கைகோர்த்து நாட்கள் நடந்தபோது...

இன்று...

நாட்காட்டிக் காகிதங்கள்
என்னைக் கிழித்துத்
தன்னைத் தொலைக்கிறது...

இன்றும் உன்னை ஒப்பிடுகிறது மனது...

வெடித்துக்கிடக்கும் நிலத்தைப்பார்த்து
வெளிரிச்சிரிக்கும் மேகத்தோடு...!

Sunday, September 25, 2011

நான் வளர்கிறேனே மம்மி!

குழந்தைகள் தங்களுக்குள்ளே யுள்ள பட்டாம்பூச்சியை உணர்ந்து கொள்ள உதவுவதுதான் உண்மையான கல்வி. ஒவ்வொரு குழந்தையும் தாங்கள் என்னவாகப் போகிறோம், என்னென்ன ஆற்றல்கள் தங்களுக்குள் புதைந்திருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்வது பள்ளிப்பருவத்தில்தான். பள்ளிப்பருவம் எவ்வளவு மகத்தான காலகட்டம் என்பதை பெற்றோரும் ஆசிரியரும் புரிந்து கொண்டு குழந்தைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால், அவர்களின் வாழ்க்கை ஒளிமயமாகும்.

குழந்தைகள் தங்களுக்குள்ளிருக்கும் திறமைகள் என்ன என்பதை அவர்களே புரிந்து கொள்ளக்கூடிய சூழலை உருவாக்குவதுதான் பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கடமையாகும். அதிலும் கண்பார்வையற்ற காது கேளாத குழந்தைகளின் பெற்றோருக்கு இப்பொறுப்பு இன்னும் அதிகம். பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து, கலந்தாலோசித்து ஒவ்வொரு நிலையிலும் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டும். குழந்தைகளின் ஆற்றல் வெளிப்பட உங்களது சிறிய தூண்டுதல் போதுமானது. தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஆராயவும், பரிசோதனைகளைச் செய்யவும், பாடங்களைக் கற்றுக் கொள்ளவும் குழந்தைகளிடம் ஏராளமான ஆற்றல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

பீஜோ என்ற மேல்நாட்டு கல்வி நிபுணர், வளரும் குழந்தைகளின் பாடத்திட்டத்திற்கான அடிப்படை நோக்கமாகக் குறிப்பிடுவது... குழந்தைகள் தங்கள் சூழலில் அதிகபட்ச வளர்ச்சியை அடைய உதவ வேண்டும் என்பதுதான்.

ஜோஹன் பெஸ்ட்லோசிஸ் என்ற மேல்நாட்டு அறிஞர், ‘குழந்தைகளின் கல்வியானது, அவர்களது இயற்கையான வளர்ச்சியை அடிப்படையாக வைத்திருக்க வேண்டும்', என்று வலியுறுத்தினார். அம்மாக்கள்தான் சிறந்த ஆசிரியர்களாக இருக்க முடியும் என்றும், வீடுதான் சிறந்த பள்ளிக்கூடமாக இருக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

குழந்தைகள் விளையாட்டின் மூலம் பாடம் பயிலும், கிண்டர்கார்டன் என்ற முறை 1930 ஜெர்மனியில் உருவானது. ஒரு குழந்தை முழு மனிதனாக உருவாக இந்த கிண்டர் கார்டன் கல்வி முறை உதவும் என்ற எண்ணத்தில் ஃபிரெட்ரிக் ஃப்ரீவெல் என்பவர் உருவாக்கினார். வளர்ந்த குழந்தைகளின் பாடத்திட்டத்தைவிட வித்தியாசமான கல்வித்திட்டம் இளங்குழந்தைகளுக்கு தேவை என்பதால், களிமண் பொம்மை செய்தல், வரைதல், பிளாக்குகளைப் பயன்படுத்தி கற்றல் போன்ற வழிமுறைகளை அறிமுகப்படுத்தினார். கே.ஜி. வகுப்புகளிலிருந்து முதல் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் குழந்தைக்கு பய உணர்ச்சி ஏற்படுவது இயற்கையே. கே.ஜி. வகுப்புகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தாக வேண்டும் என்பது போன்ற கட்டளைகளை அதிகம் திணிக்க மாட்டார்கள். விரும்பிய நேரத்திற்கு பள்ளிக் கூடத்துக்கு பெற்றோருடன் சென்று கொண்டிருந்த குழந்தை, முதல் வகுப்பிற்குள் நுழையும்போது சில ஒழுங்கு முறைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறது. பசிக்கும் போது சாப்பிடலாம், தூக்கம் வந்தால் தூங்கலாம் என்று கேஜி. வகுப்புகளில் பழகிய குழந்தைக்கு முதல் வகுப்பின் சூழல் முற்றிலும் புதிதாயிருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் வகுப்பிற்கு வந்தாக வேண்டும், உணவு இடைவேளையின் போதுதான் சாப்பிட வேண்டும் என்பன போன்ற சில கட்டளைகளைப் பின்பற்ற வேண்டி யிருக்கிறது. இதனால்தான் முதல் வகுப்பில் சேர்ந்த சில நாட்களிலேயே பள்ளிக்குப் போகமாட்டேன் என்று குழந்தைகள் அடம் பிடிப்பார்கள்.இரண்டு வருடங்களாக அனுப்பிய அதே பள்ளிதானே.அப்போதெல்லாம் அழாமல் சென்ற குழந்தை இப்போது ஏன் அடம் பிடிக்கிறது என்று புரியாமல் பெற்றோர்கள் விழிப்பார்கள். காரணம் இதுதான்.

புதிதாக விதிக்கப்பட்டுள்ள விதிகளைப் பார்த்து குழந்தை பயப்படுகிறது. அடுத்து, இதுவரை குழந்தையாக மதிக்கப்பட்ட நம்மை இப்போது பெரியவனாக்கி பார்ப்பதையும், திடீரென தம் மேல் பொறுப்புகள் சுமத்தப்படுவதையும் அது விரும்புவதில்லை.

இந்நிலையைத் தவிர்க்கத்தான் ‘இயற்கையோடு இணைந்த கல்விமுறை’ என்ற அமைப்பை ரவீந்திரநாத் தாகூர் வலியுறுத்தினார். மேலை நாடுகளில் பிரபலமானமுறை இது. வகுப்பறை, மேஜை, நாற்காலி, பிரம்பு என பயமுறுத்தும் வழக்கமான விஷயங்கள் இல்லாமல், மரம், செடி கொடிகளுக்கிடையே வகுப்புகள் நடத்தும் வித்தியாசமான முறை இது. இந்த முறை எல்லா பள்ளிகளிலும் பின்பற்றலாம். பள்ளி என்றாலே ஏற்படும் பயத்தை அகற்றி, விருப்பத்தோடு முன் வந்து மாணவர்களே கற்றுக் கொள்வர்.

முதல் வகுப்பு குழந்தைகளுக்கு ராகம் போட்டு பாடல்களைக் கற்றுத்தரும் முறை நம் பள்ளிகளில் உள்ளது. இது மிகவும் பயனுள்ள பாடமுறை. வகுப்பறையில் இப்படி பாட்டுப் பாடி விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் குழந்தை வீட்டிலும் ராகம் போட்டுப் பேசும். வாய்விட்டு, சத்தமாக எல்லாரும் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதால், வகுப்பறையில் சக மாணவர்களோடு சேர்ந்து சத்தமாக பாட்டுப் பாடும் குழந்தை வீட்டில் ‘சாப்பாடு வேண்டுமா?’ என்று கேட்டால் கூட ‘ஆமாம், வேண்டும்...’ என்பதை பத்து வீட்டிற்கு கேட்கும்படி சத்தமாய் சொல்லும். வகுப்பறையில் சத்தமாகப் பேசிப் பழகியதன் காரணமாகத்தான் இப்படி பேசுகிறது என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு, ‘ஏன் எட்டு ஊருக்கு கேட்கற மாதிரி கத்தற?’ என்று முதுகில் அடிக்கக்கூடாது.

இந்த வயதுக் குழந்தைகள் வீட்டில் நாம் சொல்லித் தரும் பாடங்களை உன்னிப்பாகக் கவனிக்கமாட்டார்கள். ம்...ம் என்று கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். திடீரென 'அம்மா, பக்கத்து வீட்டுல சினிமா ஓடுது. நாமும் டி.வி போடலாம்...' என்பார்கள். ‘அப்ப, இவ்வளவு நேரம் நான் சொல்லிக் கொடுத்த பாடத்தை கவனிக்காம, பாட்டு கேட்டுகிட்டிருந்தியா?’ என்று கேள்வியெழுப்பாதீர்கள். இந்த வயதில் கவனக்குறைவும், கவனச்சிதைவும் ஏற்படுவது இயல்புதான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

முதல் வகுப்பு படிக்கும் குழந்தைகளால் அதிகநேரம் ஒரே மூச்சாய், கவனமாய் பாடத்தை கவனிக்க முடியாது. சில குழந்தைகள் பாதிபடிப்பிலேயே தூங்கி வழியும். புத்தகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டேயிருக்கவும் முடியாது. பத்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து பாடம் சொல்லித் தந்து வெறுப்பேற்றாதீர்கள். அவ்வப்போது இடைவெளி அவசியம். பதினைந்து நிமிடங்கள் படித்தாயா? சரி, கொஞ்ச நேரம் விளையாடு’ என்று அனுப்பி வையுங்கள்.

இல்லாவிட்டால் படிக்கும் முறையையாவது மாற்றுங்கள். பத்து நிமிடங்கள் கணக்குபாடம் படித்துவிட்டால், அடுத்து தமிழ் அல்லது ஆங்கில ரைம்ஸ்களுக்கு நேரம் ஒதுக்கிவிடுங்கள். அதுவும், உட்கார வைத்து சொல்லித் தராமல் ரைம்ஸ் அடங்கிய ஒலிநாடா, அல்லது சி.டி.களைப் போட்டு அதைக் கேட்கச் செய்யலாம். இப்படி டேப்பில் பாடலாக கேட்கும்போது இன்னும் ஆழமாக மனதில் பதியும்.

இதே போல் கதைகள் அடங்கிய ஒலிநாடாக்களையும் கேட்கச் செய்யலாம். வார்த்தைகளைச் சரியாக உச்சரித்துப் பழக இவை உதவும்.

அதிக நேரம் டி.வி. பார்க்கும் பழக்கத்தை குறைக்க வைத்து, புத்தகம் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துங் கள். அதே போல், க்ரெயான்கள் மற்றும், கலர் பென்சில்களால் அவர்கள் வரையும் படங்களை வீட்டுச் சுவரில் மாட்டி வையுங்கள். மறக் காமல் உங்கள் உறவினர் கள் வரும்போது, இது இவன் வரைந்த படம் என்று பெருமையாய் சொல்லுங்கள். மற்றவர்களின் பாராட்டு, ஆதரவும் இன்னும் இதைப் போல நிறைய செய்ய வேண்டும் என்ற உற்சாகத் தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தும். நேரடியாக வற்புறுத்தி செய்யச் சொல்வதை விட, இப்படி பாராட்டுவதன் மூலம் உங்கள் குழந்தையின் திறமையை வளர்க்கலாம்

தாய்ப்பாலுக்கு நிகராய் ஏதுமில்லை

ஒரு குழந்தை பிறந்து, முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமான ஒரு பருவமாகும். இந்த மூன்று மாத காலத்தில் குழந்தையைப் பராமரிக்கும் முறை சரியாக இருந்தால் பிற்காலத்தில் குழந்தையின் உடல் நலம், வளர்ச்சி குறித்த பல பிரச்சினைகளை வராமல் தடுக்கலாம்.

இந்தக் காலகட்டத்தில் ஒரு தாய் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றைச் சமாளிக்கும் வழிகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தை பிறக்கும் காலம்

ஒரு குழந்தை கருவில் உருவான காலத்தில் இருந்து 37 முதல் 40 வாரங்களில் பிறக்க வேண்டும். இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் முழுவளர்ச்சி பெற்ற, குறித்த காலத்தில் பிறந்த குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்றன.

37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்கு முன் பிறந்த குழந்தைகள்.

41 வாரங்களுக்குப் பின்னர் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்குப் பின்பிறந்த குழந்தைகள்.

குறித்த காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் முழுமையான வளர்ச்சி நிலையை அடையாததால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

பிறக்கும் குழந்தையின் எடை

ஒரு இந்தியக் குழந்தை பிறக்கும் போது இருக்க வேண்டிய சராசரி எடை 2.5 முதல் 3.5 கிலோ கிராம் ஆகும்.

எடை 2 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் இந்தக் குழந்தைகளை ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகள் என்று அழைக்கிறோம்.

உடல் எடை அதிகரித்து, உடல் இயக்கங்கள் அனைத்தும் நல்ல முறையில் உள்ளது என்பது உறுதி செய்யப்படும் வரை, இந்தக் குழந்தைகளை NEONATAL INTENSIVE CARE UNIT (NICU) என்று அழைக்கப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.

எடை 1.5 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் அந்தக் குழந்தைகள் மிக ஆபத்தான நிலையில் உள்ளவையாகக் கருதப்பட்டு மிகப் பிரத்தியேகக் கவனத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டியதிருக்கும்.

பராமரிப்பில் முக்கியமானவை:

தாய்ப்பால் கொடுத்தல்
மசாஜ்
குளிப்பாட்டுதல்,
தோல் பராமரிப்பு
கண்கள், தொப்புள் கொடி பராமரிப்பு
எடை
தடுப்பு ஊசிகள்
பிற உணவுகள் கொடுத்தல்
தாய்ப்பால்

தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன.

இன்றைய சமுதாயச் சூழலில் பல தாய்மார்களுக்குப் பாலூட்டும் பலம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பிற்காலத்தில் குழந்தைகள் பல நோய்களை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.

தாய்ப்பால் ஊட்டுவதால் உள்ள நன்மைகள்:

தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது.

தாய்க்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தருகிறது.

குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் வரை, தாய் மீண்டும் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது.

கருவுற்ற காலத்தில் கொழுப்பு மற்றும் எடை, தொடர்ந்து பால் கொடுக்கும் போது சிறிது சிறிதாகக் குறைகிறது.

குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்குத் தேவையான எல்லா சத்துக்களும் சரியான அளவில் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது.

பிற பால்களை விட தாய்ப்பால் எளிதில் செரிமானம் ஆகும்.

அலர்ஜி ஆகும் வாய்ப்புகள் குறைவு.

குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் வரை, தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள் பல நோய்களிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது.

தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் இரத்தநாள அடைப்பு நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆராய்’ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

தாய்ப்பாலில் நோய்க் கிருமிகள் இருப்பதில்லை. பிறவகை பால்களில் கிருமிகளை அகற்ற விசேஷ கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் ஊட்டுவதை எப்போது துவங்குவது?

குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் துவங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.

நார்மல் டெலிவரி எனில் பிரசவம் ஆன 30 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக பாலூட்டத் துவங்கலாம்.

சிசேரியன் பிரசவம் எனில் மயக்க நிலையிலிருந்து தாய் வெளி வந்த உடன் பாலூட்டத் துவங்கிவிடலாம்.

சிலருக்கு முதல் ஒன்றிரண்டு நாட்கள் பால் சுரக்கும் அளவு குறைவாக இருக்கலாம். ஆனால், குழந்தை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க பால் சுரக்கும் அளவும் அதிகமாகும்.

ஒரு சராசரி இந்தியத் தாயின் உடலில் ஒரு நாளில் சுரக்கும் பாலின் அளவு 700 மி.லிட்டர் முதல் 1000 மி. லிட்டர் வரை உள்ளது.

குழந்தைக்கு 1 வயது ஆகும் வரையிலும் தாய்ப்பால் ஊட்டுவது அவசியம். 1 ஒன்றரை வயதுவரை ஊட்டுவது நன்று.

சில தகவல்கள்.....

கொலஸ்ட்ரம்

பிரசவம் ஆகிய முதல் மூன்று நாட்கள் இந்த கொலஸ்ட்ரம் என்ற வெளிர் மஞ்சள் நிற பால் சுரக்கும். இவற்றில் நோய் எதிர்ப்பு அணுக்களும் புரதச் சத்தும் நிறைந்திருக்கும்.

தாய்ப்பால்

பிரசவம் ஆன மூன்று நாட்களுக்குப் பின் சுரக்கத் துவங்கும் பாலில் குழந்தைக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் சரிவிகித அளவில் இருக்கும்.

ஊட்டும் போது முதலில் வரும் பால்

பாலூட்டத் துவங்கும் போது முதலில் வரும் பாலில் புரதம், மாவுச் சத்து, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் ஆகியவை அதிகம் இருக்கும்.

கடைசியில் வரும் பால்

பாலூட்டும் போது கடைசியில் வரும் பாலில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தைகளுக்கு அதிகப்படியான சக்தியை அளிக்கும்.

தடுப்பூசி: பிற உணவுகளை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்கலாம்.

குழந்தைகளின் மனதுக்குள்ளே....


குழந்தையின் மூளையானது பல ரகசியங்களை உள்ளடக்கியது. அதன் விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள். கருவறையில் தொடங்குகிறது இதன் கதை. கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் - நியூரோன்கள் - உருவாகின்றன. என்ன வேகத்தில்? நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில்! கோடிக் கணக்கில் நியூரோன்கள் தோன்றி கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன. இவையெல்லாம் மிகக் கவனமாக ஏற்-படுத்தப் பட்டவை. தான்தோன்றித் தனமாக அல்ல.


குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களின் மூளை ஏறத்தாழ "வெறுமையானது". அதாவது எதனையுமே கற்றுக் கொள்வதற்கு அது தயாராக இருக்கும். அவர்கள் வளர வளர கண்களால் காணும் எதுவும், காதுகளால் கேட்கின்ற எதுவும், தொடுகையினால் உணரும் எதுவும், நாக்கினாலே ருசிக்கின்ற எதுவும் அவர்களது 'புதிய' மூளையில் பதிகின்றன. எங்களுக்கு சாதாரணமாகத் தோன்றும் நடப்புகள் எல்லாம் அவர்கள் புதியதாகக் கற்றுக் கொள்வதாக இருக்கும். இவை அவர்களது மூளையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. நியூரோன்களின் கோர்-வைகளிலே தாங்கள் புரிந்து கொண்டவற்றைச் சேமிக்கிறார்கள்.

குழந்தையின் மூளை கற்றுக் கொளவதற்கு வசதியான ஓர் எந்திரம்! குறுகிய காலத்தில் அவள் என்ன எல்லாம் கற்றுக் கொள்கிறாள்? தவழுவதற்கு, நடப்பதற்கு, ஓடுவதற்கு, ஆராய்ந்து திரிவதற்கு என்று எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்குப் பின்னர் மனிதருக்கென்றே உரிய சிறப்புத் தன்மையான மொழியைக் கற்க வேண்டும். கல்வி நீண்டு கொண்டே போகும். வாழ்நாள் முழுவதும்.

ஆரம்ப கால மன வளர்ச்சி நாம் எவ்வளவுக்கு குழந்தையுடன் கொஞ்சி கட்டிப்பிடித்து விளையாடுகிறோமோ அந்த அளவுக்கு நல்ல மன வளர்ச்சி இருக்கும். இந்த அவசர உலகில் எத்தனை அவசரமான வேலைகள் இருந்தாலும் குழந்தைக்கென நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டியது முக்கியம். அவர்கள் தரத்துக்கு நாம் இறங்கிவந்து விளையாட வேண்டும். மேற்கொண்டு குழந்தையின் மன வளர்ச்சி எப்படி நடைபெறுகிறது?

பெற்றோர்கள் தங்கள் 8-10 மாதக் குழந்தையை அவளது ஆசனத்தில் இருத்திவிட்டு, சமையலறையில் அடுத்த நேரத்திற்கான உணவைத் தயார் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். குழந்தை இவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கவனமாக அவதானிப்பாள். இருவரும் வேகமாக ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் போகிறார்கள். எதை எதையோ எடுக்கிறார்கள். பிறகு அவற்றை வேறு எங்கோ வைக்கிறார்கள். இதையெல்லாம் செய்யும் போது, இருவரும் ஏதோ ஒருவருக்கு ஒருவர் கூறிக் கொள்கிறார்கள். இவ்வளவு சிக்கலான நடப்புகளையும் குழந்தைகள் மிக அவதானமாக தங்கள் மனதுக்குள்ளே வாங்கிக் கொள்கின்றன. அவர்கள் மேலும் வளர்ந்து வர, இவை எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும் அவற்றின் தொடர்ச்சியையும் மொழியையும் எவ்வாறோ குழந்தைகள் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள். ஒவ்வொரு பொருளுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர். அதே போல ஒவ்வொரு செயலுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர். ஆயிரமாயிரம் பொருள்களுக்கும் ஆயிரமாயிரம் செயல்-களுக்கும் அவர்கள் இவ்வாறான தொடர்புகளை மனதில் உண்டாக்குவார்கள்.

அவர்கள் 12-18 மாத வயதை எய்தும் போது, கண்ணோக்கு, திசை, புறமொழி, சைகைகள், உணர்ச்சிகள், மனநெகிழ்ச்சி போன்றவற்றையும் துல்லியமாகத் தெரிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைக் கொண்டி-ருப்பார்கள். அச்சமயத்தில் அவர்கள் நாம் பார்க்கின்ற திசையைப் புரிந்து கொண்டு அதை நோக்கிப் பார்ப்பார்கள். அந்தத் திசையில், அதாவது நாம் நோக்குகின்ற திசையில், காணும் பொருளை அந்நேரத்தில் நாம் சொல்லும் வார்த்தையுடன் பொருத்தி மனதில் இருத்திக் கொள்வார்கள். அதே வேளையில் நாம் வெளிப்படுத்தும் சந்தேகங்களையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். எடுத்துக் காட்டாக, ஏதோ ஒரு புத்தகத்தைக் குழந்தையுடன் சேர்ந்து படிக்கும்போது, அங்கு படத்தில் இருக்கும் ஒரு மிருகத்தைக் காட்டி அதன் பெயரென்ன என்று அவள் கேட்கும்போது நாம் ஒரு பெயரைச் சொல்லி ஆனால் அது சரியானதா தெரியவில்லை என்று ஒரு சந்தேகத்தையும் சேர்த்துக் கொண்டால் அவள் அந்தச் சொல்லை அந்த மிருகத்துடன் தொடர்பு படுத்தாமல் இலகுவாக மறந்து விடுவாள்.

இவ்வயதுக் குழந்தைகள் எந்தச் சிக்கலான செயலையும் சிறு சிறு செயல்களாகப் புரிந்து கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுடன் விளையாடும்போது சில பொருள்களை எடுத்து ஒரு விளையாட்டு வண்டியில் வைத்து இழுத்துக் கொண்டு போய் இன்னொரு இடத்தில் அவற்றை வைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். பொருள்களை ஒர் இடத்திலிருந்து இன்னோர் இடத்-திற்குக் கொண்டு போதல் என்ற இந்தச் செயலைக் குழந்தைகள் மிகச் சரியாக சிறிய செயல்களாக அறிந்து கொள்கிறார்கள். இதைக் கவனிக்கும் குழந்தையும் அதே போல ஒவ்வொரு பொருளாக எடுத்து வைத்து நாம் செய்ததை அப்படியே செய்து காட்டும் திறமை வந்துவிடும்.

பிள்ளைகளின் மூளை முதல் மூன்று ஆண்டுகளுக்கு வேகமாக வளர்கிறது. இந்தக் காலகட்டத்தில் பல கோடி தொடுப்புகள் மூளைக்குள் ஏற்படுத்தப் படுகின்றன. இந்தத் தொடுப்புகளே எதிர்காலத்தில் அவர்கள் கற்கும் திறனையும், உணர்ச்சிகளையும், நடத்தையையும் நிர்ணயிக்கின்றன. குழந்தைகளின் மூளை உயிரணுக்களின் வளர்ச்சி அவர்கள் வளரும் சூழலையும் அனுபவங்களையும் பொறுத்து இருக்கும். பெற்றோர்களாகிய நாம் அவர்களுக்கு நல்ல அனுபவங்களை வழங்க வேண்டும்.

Friday, July 1, 2011


வெள்ளைக்கார துரைகளும், கங்காணி கறுப்புத் துரைகளும் எமது தோட்டத்துத் தாய்க்குலத்திற்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளை வகைதொகையின்றி செய்திருக்கிறார்கள். பெண் தொழிலாளர்கள் பல்வேறு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதைத் தோட்டப்புறத்தில் பாடப்பட்ட நாட்டுப்புற இலக்கியத்தில் காண முடிகிறது. வாழ்வுக்கே போராட்டமாக இருந்த நேரத்தில் மானத்தைக் காத்துக்கொள்ள போராடிய வேண்டிய இக்கட்டான நிலைமை தனக்கு ஏற்பட்டதை ஒரு பாடலில் இப்படி சொல்கிறாள் ஒருத்தி.

உள்ளத நான்சொல்ல வந்தேன் கேள்!
காலையிலே நாலு மணிக்குக் கேள்
கிழக்குமணி அடிக்கும்போது டிங்கு டிங்குதான்
நான் போகாவிட்டால் சோறுமில்லே!
ஐயய்யோ என்ன செய்வேன்?
பெரிய மம்முட்டி எடுத்துப் புறப்பட்டு நாபோனேன்
சுருக்கா வரலேன்னு ஐயா அடிசாரே!
அந்தக்கம்பு எடுத்தில்ல அடிசாரு கங்காணி
ஐயய்யோ அம்மா! அப்பா! அடுக்குமா?
யாருக்குத்தான் பதிசொல்வேன் துரைமாரே!
சாமக்கோழி கூவுது எழுப்பறான்;
சாமக்காரன் கூப்பிடறான்!
விறுவிறுன்னு தண்ணிபோடு எல்லம்மா!
இடுப்புத்துணி எங்கேடி வச்ச எல்லம்மா!
துறுதுறுன்னு பேசிக்கிட்டு துரை வர்றாரு!
குசுகுசுன்னு பேசிக்கிட்டு கிராணி வர்றாரு!
ஏட்டைப் புறட்டுறாரு எல்லம்மாவ கூப்பிடுறாரு
கடுகடுன்னு கூப்பிடுறாரு காத்தாயிய கூப்பிடுறாரு
விறுவிறுன்னு போறாரு வீரம்மாவ கூப்பிடுறாரு
ஏழாம் நம்பர் பள்ளத்தில் எள்ளுச்செடி தோட்டத்திலே
ஏஞ்சொல்லி வெட்டும்போது எல்லம்மாள
அந்த வெட்டு பார்க்கும் கங்காணி
விறுவிறுன்னு போயி தாவணியப் புடிச்சாரு
தங்கக் காப்பு என்று கையைப் புடிசாரு...

இப்படி இருந்த பால்மரக் காடுகளில் தாம் பட்ட இன்னல்களைத் தாங்க முடியாமல் உயிரையே மாய்த்துக்கொண்டவர்கள் பலர் உள்ளனர் என்ற உண்மையை கீழே வரும் பாடல் போட்டு உடைக்கிறது.

சாலையிலே ரெண்டு மரம்
சர்க்காரு வெச்ச மரம்
ஓங்கி வளர்ந்த மரம்
என் தங்க ரத்தினமே
அது எனக்குத் தூக்குமரம்

தோட்டத்து வாழ்க்கை தொல்லைகளைத் தாங்க முடியாமல் பலர் தாயகம் திரும்பியுள்ளனர். குறிப்பாக, இரப்பர் விலை சரிவு கண்ட காலத்தில் பல்லாயிரம்பேர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று மீண்டும் எப்படியோ தென்னிந்தியாவுக்கே திரும்பி போய்விட்டனர். அப்படி போகும் போதும்கூட மண்ணை நேசிக்கும் மாண்புடைய எமது தமிழர் கனத்த இதயத்தோடுதான் போயிருக்கின்றனர். இதைபற்றி ஒரு பாடல் இப்படி கூறுகிறது.

போய் வாரேன் பால்மரமே
போய் வாரேன் பால்மரமே
பவுனுக்குப் பவுனு ரப்பர்
பாலு வித்த காலம் போச்சு
சீட்டுப்பால் ஒரு விலையும்
கோட்டுப்பால் ஒரு விலையும்
மங்குப்பால் ஒரு விலையும்
மண்ணுப்பால் ஒரு விலையும்
சிங்கம்போல விலையை விற்றார்
பங்கம்போல நிலைகுலைந்தார்
போய் வாரேன் பால்மரமே
போய் வாரேன் பால்மரமே

இத்தனை சிரமங்களுக்கு நடுவிலும் வேறு நாதியில்லாத காரணத்தால் தமிழ் மக்கள் தோட்டத்தையே நம்பி வாழ வேண்டிய சூழ்நிலையில் சிக்கிக்கொண்டனர். மேலும், தோட்டத்தில் மக்களுக்கு வேண்டிய சில அடிப்படைகளை வெள்ளைக்கார நிருவாகம் செய்து கொடுத்திருந்தது. குறிப்பாக, குடியிருக்க வீடு, குடிநீர், குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம், கூத்துமேடை, கள்ளுக்கடை, கோயில் என்று சில வசதிகளைச் செய்துகொடுத்து மக்களை ஆட்டு மந்தைகளாகத் இரப்பர் காடுகளிலேயே அடைத்து வைத்திருந்தனர்.

இரப்பர் மரங்கள் சூழ்ந்திருந்த திறந்தவெளிச் சிறைகளில் எமது மக்கள் வாழ்வதற்காக நாளும் போராட வேண்டியிருந்தது. தோட்ட நிருவாகத்தின் கொடுமைகள், கங்காணிகளின் அடவாடிகள், சாதிச் சண்டை, கள்ளச் சாராயம், தோட்டத் துண்டாடல், குறைவான ஊதியம், விலைவாசி ஏற்றம், தொழிற்சங்கப் போராட்டம், நாட்டு விடுதலைப் போராட்டம் எனப் பல்வேறு நெருக்கடிகளை அவர்கள் கடந்து வந்திருக்கின்றனர்

1950கள் வரையில் தோட்டப் புறங்களில் அல்லல்பட்ட எமது மக்களுக்கு விடுதலை ஒளி தென்பட தொடங்கியது. பிரிட்டிசாரிடமிருந்து மலாயாவுக்கு விடுதலை பெறுவதற்கான போராட்டங்கள் நாடுமுழுவது தீவிரமடைகின்றன. இந்தப் போராட்டத்தில் தோட்டத்து தொழிற்சங்கங்களும் எமது மக்களும் மிகுந்த எதிர்பார்ப்போடு பங்கெடுத்துக் கொள்கின்றனர். அதுபற்றி ஒரு பாடல் இவ்வாறு கூறுகிறது.

எங்கள் மலாயா தங்கிடும் இன்பம்
பொங்கிட வேண்டாவா?
இந்திய சீனம லேசியர் யுரேசியர்
என்றுமிந் நாட்டினிலே – ஒன்றாய்
நன்றுடன் வாழ்ந்திடுவோம்!
யாவரும் ஈண்டு மலாயர்கள் என்று
இணையற்ற தோரின மாகவே மாறிச்
சத்தியச் செந்நெறிப் பன்னூல் கொண்டு
சாந்தியும் பெற்றிடுவோம்
1957இல் மலாயா விடுதலை அடைந்தது. ஆனால் எமது மக்களின் நிலைமை மாறியதா? தோட்டப்புறத்தையே நம்பியிருந்த மனப்போக்கு மாறியதா? நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தோட்டக்காட்டு கும்மிருட்டில் வாழ்ந்தவர்களின் மனம் இன்னும் விடியாமலே இருந்தது என்பதுதான் உண்மை.

மரமிருக்கு உளியிருக்கு
மனமிருக்கு உழைப்பதற்கு
மற்றத் தொழில் நமக்கெதுக்கு வேலப்பா – இதுவே
உற்ற தொழில் இதுநமக்குப் போதுமப்பா

என்று எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையோ முன்னேற்ற எண்ணமோ இல்லாமல் தோட்டத்தையே நம்பியிருந்த மக்கள்தாம் அதிகம் பேர். இதனாலேயே மற்ற இனங்களோடு ஒப்பிடுகையில் மலேசியத் தமிழர்களின் முன்னேற்றம் என்பது மிகவும் மந்தமாகவும் பின்தங்கியும் இருக்கிறது. இன்றும்கூட கல்வி, பொருளியல், சமூகம், அரசியல், தொழில் வாய்ப்பு என பல துறைகளிலும் தமிழர்கள் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர்.

மலேசிய நாட்டின் அரசாங்க கொள்கைகளும் தமிழர்களுடைய பின்னடைவுக்கு ஒருவகையில் காரணமாக அமைந்துவிட்டன என்பதும் மறுப்பதற்கு இல்லை. தோட்டப்புறத்து வாழ்க்கைச் சூழ்நிலைகள் இன்று அடியோடு மாறி இருந்தாலும், வளமும் வசதியும் இன்று பெருவாரியான தமிழர் வீடுகளில் ஏறி இருந்தாலும் மலேசியத் தமிழர்கள் செல்ல வேண்டிய பயணம் இன்னும் தொலைவாக இருக்கிறது; அவர்கள் ஏற வேண்டிய உயரங்கள் இன்னும் உச்சமாக இருக்கின்றன.

சுதந்திரம் என்பதின் முதலெழுத் தெங்கோ
தொலைந்து போனது; தந்திரம் பிழைத்து!
இதம்தரும் என்றே ஏற்ற சுதந்திரம்
எப்படி எங்களை விட்டுப் பிரிந்தது?

என்பதே இன்றும் எமது மக்களின் இதயங்களில் எழும்பிக்கொண்டிருக்கும் வினாவாக இருக்கின்றது.



7, 8ஆம் நூற்றாண்டுகள் முதற்கொண்டே பழந்தமிழருக்கு மலாயாவுடன் தொடர்பு இருந்துள்ளதாக தெரியவருகிறது. தமிழ் மன்னன் இராசேந்திர சோழன் கடல்வழிப் பயணம் மேற்கொண்டு மலாயாவில் கடாரம் எனும் பெயரில் நிலப்பரப்பை உருவாக்கி ஆட்சி செய்துள்ள வரலாறு உண்டு.


தொடக்க காலத்தில் வணிகத் தொடர்புகளின் பொருட்டுதான் தமிழர்கள் தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்துள்ளனர். கடாரத்தில்(Kedah) பூசாங் நதிக்கரையில் (Sungai Bujang) குடியிருப்புகளை அமைத்தனர். வந்தவர்கள் சைவர்கள் என்பதால் பூசாங்கில் சிவாலயங்களையும் கட்டினர். அவ்வாலயங்களின் எச்சங்கள் இன்றும் இருக்கின்றன. அவை தமிழன் வரலாற்றைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.


படத்தில் காணும் ஆலயங்களின் எச்சங்கள் இன்று படிப்படியாக அழிந்துவருகின்றன. இவை முற்றாக அழிவதற்கு அல்லது அழிக்கப்படுவதற்கு முன்பாக இந்திய அல்லது தமிழக அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை இங்கு வருகை மேற்கொண்டு அகழ்வாய்வு செய்தால் பற்பல உண்மைகள் வெளிவரக்கூடும். நமது வரலாற்றுச் சான்றுகளைக் கண்டுபிடித்து ஆவணப்படுத்த இயலும்.

இதில் சிக்கல் என்னவென்றால், தமிழக, இந்திய எல்லைக்குள் கிடைக்கும் தொல்லியல் சான்றுகளை எல்லாம் அழித்தொழிக்கும் நடுவண் அரசையும் அதற்குத் துணைபோகும் தமிழக அரசையும் நம்புவதும் எதிர்பார்ப்பதும் ஏமாற்றத்திலேயே போய் முடியலாம்.


வரலாற்று நூல்கள், கல்வெட்டுகள், புதைபொருள்கள் ஆகியவை தவிர மலாயா நாட்டின் மக்களுடைய மொழியோடும், பண்பாட்டோடும், பழக்க வழக்கத்தோடும் தமிழரின் அடையாளங்கள் இரண்டறக் கலந்துள்ளன.


குறிப்பாக மலாய்மொழியில் தமிழ்ச்சொற்களும் தமிழ் மூலத்தைக் கொண்ட வடமொழிச் சொற்களும் நிறைய கலந்திருக்கின்றன. காட்டாக, அம்மா(Emak), ஐயா(Ayah), நகரம்(Negara), கடை(Kedai), கப்பல்(Kapal), கட்டில்(Katil), பெட்டி(Peti), கெண்டி(Kendi), அரசன்(இராஜா - Raja), மாணிக்கம்(Manikam), ஆகமம்(Agama), பத்தி(பக்தி - Bakti), மந்திரம் (Mantera) இப்படியான பல்லாயிரம் சொற்கள் இருக்கின்றன.



தமிழர்களுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக மலாயா நாட்டு மக்கள் பெற்றுள்ள பயன்கள் பலவுண்டு. உழவு, பயிர்த்தொழில், ஏர் உழுதல், நீர் பாசனம் செய்தல் ஆகிய தொழில்களைக் கற்றுக்கொண்டனர். வணிக முறைகள், நாணயத்தைப் பயன்படுத்துதல், இரும்பு ஆயுதங்கள் செய்தல், பொன், வெள்ளி ஆகியவற்றைக் கொண்டு அணிகலன்கள் உருவாக்குதல், மருத்துவம் ஆகிய கலைகளை அறிந்துகொண்டனர். தமிழரைப் போல பருத்தி, பட்டு ஆகிய ஆடைகளை நெசவு செய்து அணிந்தனர். சமையல் செய்வதில் தமிழரைப் போலவே தானிய வகை, மணப் பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். தமிழ்க் இசை, நடனம், பாவைக்கூத்து போன்ற கலைகளை தங்கள் கலைகளோடு பிணைத்துக்கொண்டனர். வெற்றிலைப் பாக்கு மாற்றி திருமணம் செய்வது போன்ற திருமண சடங்கில் வெற்றிலைப் பாக்கை ஏற்றுக்கொண்டனர். கையில் மருதாணி வைத்து அழகு பார்த்தனர். பள்ளாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை தங்கள் வயப்படுத்திக்கொண்டனர்.


இரண்டாம் கட்டமாக, 1400களில் மலாக்கா எனும் நகரம் மன்னன் பரமேசுவரனால் மலாயாவில் உருவாக்கப்பட்டது. இவருடைய அரச தலைமுறை 110 ஆண்டுகள் மலாக்காவை ஆட்சி செய்தது. தென்கிழக்கு ஆசியாவில் மலாக்கா தலைசிறந்த வணிக நகரமாக இருந்தபோது மீண்டும் வணிக நோக்கத்திற்காகத் தமிழர்கள் மலாயாவுக்கு வந்திருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் உள்நாட்டு பெண்களை மணந்துகொண்டு இங்கேயே தங்கிவிட்டனர்.

இவர்களின் தலைமுறை இன்று தங்களின் மொழி, இன, சமய, பண்பாட்டு அடையாளங்களைத் தொலைத்துவிட்டு இருக்கின்றனர். உள்நாட்டு மலாய் மொழியின பண்பாட்டோடு ஏற்பட்ட கலப்பின் காரணமாக இப்போது புதிய இனம்போல மாறி இருக்கின்றனர். இவர்கள் ‘மலாக்கா செட்டிகள்’ என்று இன்றைய மலேசியாவில் அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் தமிழர் பரம்பரையில் வந்தவர்களாக இருந்தாலும் மலேசியத் தமிழர்களிடமிருந்து தனித்தே இருக்கின்றனர். தமிழரே அல்லாதவர் போலாகிவிட்டனர்.

வரலாற்றுக் காலத்தைக் கடந்து மலாயாவை ஆங்கிலேயர் கைப்பற்றிய பிறகு பெருவாரியான எண்ணிக்கையில் தென்னிந்தியத் தமிழர்கள் மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்டனர். இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கும், கரும்புக் காடுகளில் பணியாற்றவும், காடுகளை அழித்து நாடாக்கவும் சஞ்சிக்கூலிகளாக வந்த தமிழர்களை ஆங்கிலேயர் பயன்படுத்தினர். (சஞ்சி – மலாய்மொழியில் Janji அதாவது ஒப்பந்தம்)

இரப்பர் தோட்டங்களில் தமிழர்கள் பட்ட இன்னல்களும் கொடுமைகளும் அவலங்களும் சொற்களால் விவரிக்க முடியாதவை. காடுகளை அழிக்கும் போது கொடிய விலங்குகளால் தக்கப்பட்டு இறந்தவர்கள், இரப்பர் காடுகளில் நஞ்சுயிரிகளால் தாக்கப்பட்டவர்கள், மலேரியா காய்ச்சல், கொடிய நோய்கள், மருத்துவ வசதியின்மை முதலிய காரணங்களால் மரணத்தை தழுவியவர்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தால் 12 இலக்கம்(இலட்சம்) தமிழர்கள் மலாயாவில் மாண்டுபோயிருக்கின்றனர்.

இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயரைத் தோற்கடித்து மலாயாவை சப்பானியர் கைப்பற்றியபோது தமிழர்கள் பட்ட துன்பங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. சயாம் தொடர்வண்டி திட்டத்திற்கு (சயாம் ரயில்வே) வேலை செய்ய ஆயிரக்கணக்கில் நம்மவர்கள் இரவோடு இரவாகக் கொண்டுசெல்லப் பட்டுள்ளனர். தங்கள் குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்களா இல்லையா? என்றுகூட தெரியாமல் தவித்திருந்தனர் நம் மக்கள். இப்படி தண்டவாளம் அமைக்க சென்றவர்கள் கொத்துக் கொத்தாக மடிந்துபோய் கும்பல் கும்பலாகப் புதைக்கபட்டுள்ளனர்.

இத்தனைக்கும் இடையில் மலாயாவையும், 1957க்குப் பிறகு மலேசியாவையும் ஒரு வளமிக்க நாடாக உருவாக்குவதில் தமிழர்களி பங்கு மிகப்பெரியது என்றால் மிகையல்ல. மலேசியா விவசாய நாடாக இருந்த காலத்தில் அதனுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உறுதிணையாக இருந்த இரப்பர், செம்பனை உற்பத்தி, கரும்பு, கொக்கோ முதலான தோட்டத்துறைகளில் இரத்தம் சிந்தி தமிழ் மக்கள் உழைத்தார்கள்.



இன்றைய நிலையில் மலேசியத் தமிழர்கள்(இந்தியர்கள்) பல்வேறு நிலைகளில் முன்னேற்றம் கண்டுள்ளனர். உயரிய கல்விக் கற்றோராக, தொழிலதிபர்களாக, நிபுணர்களாக, செல்வந்தர்களாக, பெரும் கோடிசுவரர்களாக உருவாகி இருக்கின்றனர். ஏழைகளாக இந்த நாட்டில் குடியேறியவர்கள் இன்று வளமான வாழ்க்கை வாழ்கின்றனர். இவர்களுக்கு இடையில் இன்னும் நூறாண்டுகளுக்கு முன்பு மலாயா வந்து தோட்டங்களில் வாழ்ந்த அதே இக்கட்டான சூழலில் வாழ்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். பல்வேறு சமுதாயத்தில் சிக்கல்களிலும் சீர்கேடுகளிலும் மாட்டிக்கொண்டு தவிப்பவர்களும் ஏராளமாக உள்ளனர்.


எது எப்படி இருப்பினும் தமிழர்கள் இன்று நாட்டின் குடியுரிமை பெற்ற இனமாக இந்தியர்கள் என்ற முத்திரையோடு வாழ்த்து வருகின்றனர். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற உரிமைகளுக்காக இன்றளவும் போராடி போராடி தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.


இருக்கின்ற உலக நடப்பையும் மலேசிய சூழலையும் கூர்ந்து கவனித்துப் பார்க்கையில், அடுத்து வருகின்ற ஐம்பது ஆண்டுகளில் மலேசியத் தமிழர்கள் தங்களின் மரபியல் அடையாளங்களான மொழி, இனம், சமயம், கலை, பண்பாடு, இலக்கியம், வரலாறு, வாழ்வியல் ஆகிய அனைத்தையும் படிப்படியாக இழந்துவிட்டு புதிய மலேசிய சமுதாயமாக உருமாறி போகக்கூடிய நிலைமை வந்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.


காரணம், மேலே சொன்னதுபோல மலாக்காவில் இதே தமிழ் இனம்தான் கண்முன்னாலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறது வேறொரு தோற்றத்தில்.. வேறொரு அடையாளத்தில்..!

Thursday, May 12, 2011

Sunday, March 20, 2011

பரமேஸ்வரனின் வாழ்க்கை வரலாறு


பரமேஸ்வரன் எனும் சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து தருவிக்கப் பட்ட தமிழ்ச் சொல்.
பரமா எனும் சொல்லும் ஈசுவரன் எனும் சொல்லும் இணைந்து பெற்றதே பரமேசுவரன் எனும் சொல் ஆகும்.
இந்துக் கடவுளான சிவனுக்கு மற்றொரு பெயர் ஈசுவரன்.

பரமேஸ்வரனின் வாழ்க்கை வரலாறு

* 1344 - ஸ்ரீ ராணா வீரா கர்மா எனும் சிங்கப்பூர் ராஜாவுக்கு மகனாகப் பிறந்தார்.

* 1399 - தந்தையின் இறப்பிற்குப் பின் ஸ்ரீ மகாராஜா பரமேசுவரா எனும் பெயரில் சிங்கப்பூர் அரியணை ஏறினார்.

* 1401 - சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

* 1402 - மலாக்காவைத் தோற்றுவித்தார்.

* 1405 - சீனாவிற்குச் சென்று மிங் அரசரின் ஆதரவைப் பெற்றார்.

* 1409 - பாசாய் நாட்டின் இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார். சமயம் மாறினார். மலாக்கா ஒரு சுல்தான் ராஜ்யமாக மாறியது.

* 1411 - சீனாவிற்கு மறுபடியும் சென்று மிங் அரசரிடம் பாதுகாப்பை நாடினார்.

* 1414 - தன்னுடைய 69 அல்லது 70 ஆவது வயதில் காலமானார்.

மலாக்காவைக் கண்டுபிடித்தல்

ஜாவாவை ஆண்டு வந்த ஸ்ரீ விஜயா பேரரசின் செல்வாக்கு 14 ஆம் நூற்றாண்டில் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. மலாய்த் தீவுக் கூட்டங்களில் இருந்த சிற்றரசர்களின் அச்சுறுத்தல்களும் அதிகரித்து வந்தன.

ஸ்ரீ விஜயா எனும் பேரரசு ஜாவாத் தீவின் வரலாற்றில் மங்காதப் புகழைப் பெற்ற ஒரு மாபெரும் பேரரசு. சுற்று வட்ட அரசுகள் அனைத்தும் ஸ்ரீ விஜயா பேரரசிடம் திறை செலுத்தி வந்தன.

திறை என்றால் கப்பம். ஒரு பேரரசுக்கு மற்றொரு சிற்றரசு செலுத்தும் வரியைத் தான் கப்பம் என்பார்கள். அப்படி மற்ற சிற்றரசுகளிடம் இருந்து திறைகள் வாங்கிய ஸ்ரீ விஜயா பேரரசு, 1290 ஆம் ஆண்டில் ஜாவாவில் இருந்து விரட்டப் பட்டது.

அதன் பின்னர் ஜாவாவில் சிங்கசாரி எனும் ஒரு புதிய அரசு உருவானது. அடுத்து ஸ்ரீ விஜயா பேரரசின் செல்வாக்கும் சன்னம் சன்னமாகக் குறையத் தொடங்கியது. தொடர்ந்து சிங்கசாரி வலிமை வாய்ந்த பெரும் அரசாகவும் மாறியது.

ஸ்ரீ விஜயா பேரரசு

இந்த சிங்கசாரி அரசு, மஜாபாகிட் பேரரசின் வழித் தோன்றல் ஆகும். மலாயு எனும் இடத்தில் ஸ்ரீ விஜயா பேரரசின் அரண்மனை இருந்தது.


அந்த அரண்மனையைச் சிங்கசாரி அரசு தாக்கிய சம்பவங்கள் நிறைய உள்ளன. மலாயு எனும் இடம் இப்போது ஜாம்பி என்று அழைக்கப் படுகின்றது. பின்னர் ஸ்ரீ விஜயா பேரரசு தன்னுடைய தலைநகரத்தைப் பலேம்பாங்கில் இருந்து மலாயுவிற்கு மாற்றியது.

இருப்பினும் பலேம்பாங் முக்கியமான அரச நகராகவே விளங்கி வந்தது. 14 ஆம் நூற்றாண்டில் பலேம்பாங் அரச நகரமும் மஜாபாகிட் பேரரசின் கரங்களில் வீழ்ந்தது. அத்துடன் மாபெரும் ஸ்ரீ விஜயா பேரரசின் 1000 ஆண்டுகள் ஆளுமைக்கு ஒரு முற்றுப் புள்ளியும் வைக்கப் பட்டது. ஒரு சகாப்தம் வீழ்ந்தது.

பலேம்பாங் தோற்கடிக்கப் பின்னர் ஸ்ரீ விஜயா அரசக் குடும்பத்தினர் பிந்தான் தீவில் அடைக்கலம் அடைந்தனர். அத்துடன் ஸ்ரீ விஜயா அரச குடும்பத்தினருடன் பல ஆயிரம் மக்களும் அந்தத் தீவில் தஞ்சம் அடைந்தனர்.


அடுத்தக் கட்டமாக பிந்தான் தீவில் தற்காலிகமாக ஸ்ரீ விஜயா ஓர் அரசாட்சியை உருவாக்கிக் கொண்டது. அதற்கு சாங் நீல உத்தமன் என்பவர் அரசர் ஆனார். இந்தக் காலக் கட்டத்தில் துமாசிக் எனும் சிங்கப்பூரைத் தெமாகி எனும் ஒரு சிற்றரசர் ஆண்டு வந்தார்.


சாங் நீல உத்தமன்

தெமாகியைச் சியாம் நாட்டு அரசு ஒரு சிற்றரசராக ஏற்கனவே நியமனம் செய்து வைத்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 1324ல் பிந்தான் தீவில் இருந்து வந்த சாங் நீல உத்தமன் திடீரென்று துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தினார். அந்தத் தாக்குதலில் தெமாகி சிற்றரசர் கொல்லப் பட்டார்.

இதனால் சாங் நீல உத்தமன் சியாம் அரசின் கோபத்திற்கும் உள்ளானார். பின்னர் சிங்கப்பூர் ஓர் ஊர் உருவாக்கப் பட்டது. ஓர் ஊர் தான். நகரம் அல்ல. அதை உருவாக்கியவர் சாங் நீல உத்தமன். அடுத்து வந்த 48 ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தது. வளர்ச்சியும் பெற்றது.

1366ல் சீனாவில் இருந்து ஒரு சீனத் தூதர் சிங்கப்பூருக்கு வந்தார். அவர் சீன அரசரின் பிரதிநிதியாகும். அவர் சாங் நீல உத்தமனைச் சிங்கப்பூரின் அதிகாரப் பூர்வமான ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டார். சாங் நீல உத்தமனுக்கு Sri Maharaja Sang Utama Parameswara Batara Sri Tri Buana எனும் சிறப்புப் பெயரும் வழங்கப் பட்டது.

சாங் நீல உத்தமனுக்குப் பிறகு அவருடைய மகன் ஸ்ரீ பராக்கிரம வீர ராஜா என்பவர் சிங்கப்பூரின் ராஜாவாகப் பதவி ஏற்றார். இவர் 1372 லிருந்து 1386 வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார்.

அந்தச் சமயத்தில் சிங்கப்பூரின் உள் ஆட்சியில் சில திருப்பங்கள் ஏற்பட்டன. குடும்பச் சச்சரவுகள் தான். அதனால் சாங் நீல உத்தமனின் பேரனாகிய ஸ்ரீ ராணா வீரா கர்மா என்பவர் சிங்கப்பூரின் ஆட்சிப் பதவி ஏற்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.



பரமேஸ்வராவின் வரலாற்றுப் பயணம்

இவர் சிங்கப்பூரை 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இந்தக் காலக் கட்டத்தில் சுமத்திராவில் இருந்த மஜாபாகித் அரசு திடீரென்று சிங்கப்பூரின் மீது தாக்குதல் நடத்தியது.

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட சிங்கப்பூர் அரசு ஏற்கனவே மஜாபாகித்தின் மீது சில தாக்குதல்களையும் நடத்தியுள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்தத் தாக்குதல்களுக்குப் பழி வாங்கும் படலமாக இந்த மஜாபாகித் அரசின் திடீர் தாக்குதலும் அமைந்தது.

ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்பவர் சாங் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும். இவர் மஜாபாகித்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க நினைத்தார். அதனால் சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார்.

ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா தன்னுடன் சில நேர்மையான விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு மலாயாவின் பெருநிலப் பகுதிக்குள் நுழைந்தார். மலேசியாவின் பழைய பெயர் மலாயா. மலாயாவின் வடக்குப் பக்கமாக முன்னேறி வரும் போது மூவார் எனும் இடத்தை அடைந்தார்.

மூவார் பகுதியில் பியாவாக் பூசோக் (அழுகிப் போன உடும்பு) எனும் ஓர் இடம் இருக்கிறது. அதற்கு அருகாமையில் கோத்தா பூரோக் எனும் மற்றோர் இடமும் இருக்கிறது. இந்த இரு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தில் தன்னுடைய புதிய அரசை உருவாக்கலாம் என்று பரமேஸ்வரா தீர்மானித்தார்.

நன்கு ஆராய்ந்து பார்த்ததில் அந்த இடங்கள் இரண்டுமே பரமேஸ்வராவுக்குப் பிடிக்கவில்லை. ஒரு புதிய அரசு அமைக்க பொருத்தமாகவும் அமையவில்லை. ஆகவே அவர் தொடர்ந்து வட திசையை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார்.

அப்படி போய்க் கொண்டிருக்கும் போது செனிங் ஊஜோங் எனும் இடத்தை அடைந்தார். இந்த செனிங் ஊஜோங் இப்போது சுங்கை ஊஜோங் என்று அழைக்கப் படுகிறது.

இந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி ஒரு மீன்பிடி கிராமம் தென்பட்டது. அந்தக் கிராமம் பெர்த்தாம் ஆற்றின் துறைமுகத்தில் இருந்தது. பெர்த்தாம் ஆறு இப்போது மலாக்கா ஆறு என்று அழைக்கப் படுகின்றது.

அந்த மீன்பிடி கிராமம் தான் இப்போதைய மலாக்கா மாநகரம் உருவான இடம். இந்த இடத்தில் தான் ஒரு சருகுமான் ஒரு நாயை எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது. நாய் மல்லாக்காக விழுததாலும் பரமேஸ்வரா சாய்ந்து ஓய்வு எடுத்த மரத்தின் பெயர் மலாக்கா எனும் பெயர் கொண்டதாலும் அந்த இடத்திற்கு மலாக்கா என்று பெயர் வந்தது.


பரமேஸ்வராவின் திருமணம்

இந்தக் காலக் கட்டத்தில் வட சுமத்திராவில் பாசாய் எனும் ஓர் சிற்றரசு இருந்தது. இது கடல் கரையோரமாக இருந்தச் சிற்றரசு.

சுமத்திரா எனும் சொல் சமுத்திரம் எனும் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்தது. இந்தப் பாசாய் சிற்றரசின் இளவரசியைப் பரமேஸ்வரா 1409 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு அவர் இஸ்லாமிய சமயத்தில் இணைந்தார். தன் பெயரை இஸ்கந்தார் ஷா என்றும் மாற்றிக் கொண்டார். ஷா என்பது ஓர் அரசரைக் குறிக்கும் பாரசீகச் சொல்.

மலாக்கா சுல்தான்கள் ஆட்சி காலம்

பரமேஸ்வரா எனும் இஸ்கந்தார் ஷா 1400–1414


சுல்தான் மேகாட் இஸ்கந்தார் ஷா 1414–1424

சுல்தான் முகமது ஷா 1424–1444

சுல்தான் அபு ஷாகித் 1444–1446

சுல்தான் முஷபர் ஷா 1446–1459

சுல்தான் மன்சூர் ஷா 1459–1477

சுல்தான் அலாவுடின் ரியாட் ஷா 1477–1488

சுல்தான் முகமது ஷா 1488–1528

சமய மாற்றம்

பரமேஸ்வராவின் சமய மாற்றம் தெளிவற்ற நிலையில் இன்னும் இருந்து வருகிறது. அவர் சமய மாற்றம் செய்து கொண்டார் என்பதற்குச் சரியான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

சீனாவில் கிடைத்த காலக் கணிப்புக் குறிப்புகளின் படி பரமேஸ்வராவின் மகன் 1414ல் சீனாவிற்கு விஜயம் செய்து இருக்கிறார். தன்னுடைய தந்தையார் பரமேஸ்வரா இறந்து விட்டதாகச் சொல்லியும் இருக்கிறார்.

சீனாவின் மிங் பேரரசர் பரமேஸ்வராவின் மகனை மலாக்காவின் இரண்டாவது ஆளுநராக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு உள்ளார். அந்தப் பரமேஸ்வராவின் மகன்தான் ஸ்ரீ ராம விக்ரமா என்று பின்னர் அழைக்கப் பட்டார்.


அவரை பரமேஸ்வர ராஜா என்று மலாக்காவில் அழைக்கப் பட்டும் இருக்கிறார். அவருடைய குடி மக்கள் அவரை சுல்தான் ஸ்ரீ இஸ்கந்தர் சுல்கார்னாயின் ஷா என்றும் சுல்தான் மேகாட் இஸ்கந்தர் ஷா என்றும் அழைத்து உள்ளனர். இவர் மலாக்காவை 1414 லிருந்து 1424 வரை ஆட்சி செய்து உள்ளார்.


பரமேஸ்வரா இறப்பு

1414 ஆம் ஆண்டு பரமேஸ்வரா தன்னுடைய 70 ஆவது வயதில் காலமானார். அவருடய உடல் போர்டிக்சனுக்கு அருகில் இருக்கும் தஞ்சோங் துவான் எனும் இடத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம் அல்லது சிங்கப்பூரில் உள்ள கென்னிங் கோட்டையில் புதைக்கப் பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இதுவும் இன்னும் உறுதி படுத்தப் பட வில்லை. அதைப் பற்றி ஆய்வுகள் செய்து கொண்டு இருக்கிறேன்.

கென்னிங் கோட்டைக்கு அருகில் ஓர் இஸ்லாமிய இடுகாடு இன்னும் இருக்கிறது. பரமேஸ்வராவுக்குப் பின் அவருடைய மகன் மேகாட் இஸ்கந்தர் ஷா மலாக்காவை 1424 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் மலாக்காவின் மூன்றாவது ஆட்சியாளர் ராஜா தெங்ஙா என்பவர். இவரை ராடின் தெங்ஙா என்றும் அழைத்தனர். இவருக்கு ஸ்ரீ மகாராஜா எனும் விருது வழங்கப் பட்டது.

இவர் இஸ்லாமிய சமயத்தைத் தழுவி முகமது ஷா எனும் விருதைப் பெற்றார். இவர் இந்திய முஸ்லிம் பெண்ணை மணந்து கொண்டதால் பெயர் மாற்றம் கண்டிருக்கலாம் என்று கல்வியாளகள் நம்புகின்றனர்.

அவர் இறந்த பிறகு அவருடைய மகனான ரோக்கான் இளவரசர் ராஜா இப்ராகிம் அரியணை ஏறினார்.

சமூகச் சச்சரவுகள்

ராஜா இப்ராகிம் ஆட்சி காலத்தில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டது. மலாக்காவில் வாழ்ந்த இந்திய முஸ்லீம் சமூகத்தினருக்கும் பாரம்பரிய இந்து மலாய்க்காரர்களுக்கும் இடையே சச்சரவு உண்டாகியது.

ராஜா இப்ராகிமிற்கு இஸ்லாமியப் பெயர் இருந்தும் அவர் புதிய சமயத்தைத் தழுவவில்லை என்பது ஒரு பெரும் குறைகூறல். அவர் ஸ்ரீ பரமேஸ்வரா தேவா ஷா பெயரில் ஆட்சி செய்தார் என்பது மற்றொரு குறைகூறல்.

அந்தச் சச்சரவுகளினால் அவரால் நல்ல முறையில் ஆட்சி செய்ய முடியவில்லை. அதனால் பதினேழு மாதங்கள் தான் ஆட்சி செய்ய முடிந்தது. பாவம் அவர். 1446ல் அவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப் பட்டார். அதன் பின்னர் ராஜா இப்ராகிமின் ஒன்று விட்டச் சகோதரர் ராஜா காசிம் பதவிக்கு வந்தார்.


ராஜா காசிமின் தாயார் ஒரு தமிழ் முஸ்லிம் ஆவார். ராஜா காசிமின் பெயர் சுல்தான் முசபர் ஷா என்று மாற்றம் கண்டது. மலாக்கா சுல்தான்களின் ஆட்சியில் புதிய சகாப்தம் மலர்ந்தது. இந்தக் கட்டத்தில் இந்துக்களும் இந்து சமயமும் அதிகாரம் இல்லாமல் போயினர்.


பரமேஸ்வராவுக்குப் பின்

பரமேஸ்வரா எனும் ஒரு சாதாரண மனிதன் பகைவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி வந்தான். எங்கே போவது என்று தெரியாமல் புகலிடம் தேடி அலைந்தான்.

வலிமையற்றது வலிமையானதைத் தோல்வி அடையச் செய்ய முடியும் என்பதைக் கண்டு அறிந்தான். அதையே ஒரு நல்ல சகுனமானக் கருதி ஓர் இருப்பிடத்தை உருவாக்கினான்.

அந்தச் சாதாரண இருப்பிடமே பின் நாளில் ஆசிய வரலாற்றில் மகத்துவம் வாய்ந்த தனிப் பெரும் வரலாறாக மாறியது. செல்வாக்கு மிக்க சக்தியாகவும் மாறியது.

மலாக்காப் பேரரசு தென்கிழக்கு ஆசியத் தீவுக் கூட்டத்தின் தலைவிதியையே மாற்றியும் அமைத்தது. உலக மன்னர்கள் வியந்து மனப்பூர்வமாகப் பாராட்டினார்கள். அண்டை நாட்டு மன்னர்கள் ஆழ்ந்த மரியாதை கொடுத்தனர்.


மலாக்காவின் செல்வாக்கு அதிகாரமும் ஆதிக்க நிலைப்பாடும் தென்கிழக்கு ஆசியத் தீவுக் கூட்டத்தில் இஸ்லாமிய சமயம் பரவுவதற்குச் சாதகமாக அமைந்தன.

1447ல் கர்த்தா விஜயா என்பவர் மஜாபாகித்தின் அரசரானார். இந்தோசீனாவில் இருந்த சம்பா நாட்டின் இளவரசியான தாராவதியை மணந்தார்.

மனைவியின் அறிவுரையின் படி இஸ்லாமியச் சமயத்தில் இணைந்தார். கர்த்தா விஜயாவின் சகோதரர்களில் ஒருவரான சுனான் அம்பேல் என்பவர் ஜாவா சுராபாயாவில் இஸ்லாமியச் சமயம் பரவுவதற்கு மிகுந்த முயற்சிகளை எடுத்துக் கொண்டார்.

அந்தக் காலக் கட்டத்தில் பலேம்பாங் இஸ்லாத்திற்கு மாறியது. 1459ல் சுல்தான் மன்சூர் ஷா கெடா, பகாங் மீது தாக்குதல்கள் நடத்தினார். வெற்றியும் பெற்றார். பகாங் நிலப் பகுதி மலாக்காவின் ஆளுமையின் கீழ் வந்தது.

இந்தச் சமயத்தில் வேறு ஒரு நிகழ்ச்சியும் நடந்தது. 1470ல் சம்பாவில் ஏற்பட்ட படுகொலைகளில் இருந்து தப்பித்த 60,000 பேர் மலாக்காவில் தஞ்சம் அடைந்தனர்.


பரமேஸ்வராவின் வாணிக மையங்கள்

1400ஆம் ஆண்டுகளில் மலாக்கா பரமேஸ்வராவின் ஆட்சி காலத்தில் மலாக்கா மிகவும் புகழ் பெற்ற வாணிகத் துறைமுகமாக விளங்கியது. அங்கே 80 மொழிகள் பேசப் பட்டன என்பது எல்லாம் வரலாற்றுச் சான்றுகள்.

உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வணிகர்கள் மலாக்காவிற்கு வந்தனர். அந்த இடங்களின் விவரம் வருமாறு:

தமிழ் நாடு, கெய்ரோ, ஏடன், ஓர்முஸ். ரோமாபுரு, துருக்கி, குஜாராத், கோவா. மலாபார், ஓரிசா, ஸ்ரீ லங்கா. வங்காளம், சியாம், கெடா, பகாங்,

பட்டானி, கம்போடியா, சம்பா, கொச்சின், புருணை, லிங்கா, மினாங்கபாவ், பாசாய், மாலைத் தீவுகள்.

16 ஆம் நூற்றாண்டில் கீழைத் தேச நாடுகளில் மலாக்கா மிகவும் முக்கியமான துறைமுகமாக விளங்கியது.
அதன் செல்வ வளப்பத்தைக் கண்டு தோம் பைரஸ் (Tom Pires) என்பவர் “யார் ஒருவர் மலாக்காவின் பிரபுவாக இருக்கின்றாரோ அவர் வெனிஸ் நகரின் கழுத்தின் மீது கை வைத்தது போல் ஆகும்” என்று சொன்னார்.
தோம் பைரஸ் ஒரு போர்த்துகீசிய வணிகர், எழுத்தாளர் ஆகும்.

Sunday, February 20, 2011

நினைவுகளை சுமக்கும் கைதியாய் உன்னுடன் நான் !

நனைய மறந்த மழைத்துளி ..
கோர்க்க முடியாத பனித்துளி ..
சேர்க்க முடியாத மழலை சிரிப்பு .
பார்க்க முடியாத மொட்டவிழும் பொழுது..
கைக்குள் அகப்படாத தென்றல் காற்று ..
...எல்லாவற்றிற்கும் மேலாக
வெல்ல முடியாத உன் இதயம் ..
எப்போதும் வெற்றிடமாய் நான்..

கவிதைகள் கிறுக்கி கறை படிந்த பொழுதும் .
உன் பார்வை பட்ட மறுநோடி .
மீண்டும் வெற்றுக் காகிதமாய் என் இதயம் .!
மீண்டும் , மீண்டும் கிறுக்குக்கின்றேன் .
என்றாவது உன் இதயத்தில்
என் நினைவுகள் நிரப்பபபடலாம் என்ற
ஏதோ ஒரு நம்பிக்கையில் அதுவரை
நினைவுகளை சுமக்கும்
கைதியாய் உன்னுடன் நான் !

Tuesday, December 7, 2010

Leaping to nowhere .

Malaysia is a small country with big plans – NEM, GTP, ETP. Lump them all together and we get a fantastic result: a developed nation. It is nothing less than a “quantum leap into the future”. These goals can be attained. Just focus on them. It is a journey that all – “the government, the private sector and the people” – must undertake together. This is a terrific script – riddled with holes. The government is standing on shaky ground, the private sector is parking its money elsewhere and the people have grown so wearied of all the lies, injustices and greed that they would rather go their own way than jump on the rickety bandwagon. It is only the emperor and all his court jesters who believe in their own tall tales.

While all the talk is about a better future, it is clear to all that the carrots thrown at the people are mere baits to entice them to vote the same old puffy party into power yet again. The boastful presentations and declarations are a camouflage to distract public attention from the harsh realities of the Malaysian political and social environment. Behind the facade is a grim picture of a society divided into hostile enclaves and ready to take the country down the road to the abyss. Generating wealth and staying united are furthest from their fevered minds. The ideal conditions to turn Malaysia into a flourishing land are simply not there.

Uppermost in the minds of the dominant race is supremacy and not economic prosperity. The doctrine of supremacy is more important than the blueprint of development. Staying at the top of the social ladder is more crucial than seeing the economic pie being shared equally. Hurling threats against others whose forefathers have enriched the soil with their toil and sweat is a more cherished pursuit than carving out the perfect map for growth. At every turn, the cry that filled the land carries with it strong hints of violence. It is as if the battle lines are drawn and all it needs is a spark to set off an inferno.

Politics, and not economics, permeates the life of the people. Worse still, politics, race and religion have become the major theme and a stumblingblock to real progress. Umno plays all three cards with relish and gusto to advance its own agenda and at the same time to browbeat those of other races and faiths. It pays lip service to the gospel of peace and harmony. Its elite leaders will not soil their hands to make a point on race or religion. They leave it to the hot-tempered, emotionally charged supporters to do the dirty job while they stand afar and watch the spectacle with delight and satisfaction.

Tempers are running high. Tension is escalating given that both sides are sharpening their electoral weapons for the battle ahead. Umno (forget the other lifeless partners) will turn up the heat with its dangerous political gameship and may even throw caution to the wind in its lust for power. The country is feeling the jitters knowing that a party desperate to hold on to its seat may whip up an all-consuming storm that will destroy everything in its path. In this state of chaos, not even the opposition can hope to stay alive. It too will be reduced to ashes. These are scary prospects and not even the opium of development can do much to soothe frightened minds.

The journey to economic prosperity cannot start against a background of political brinkmanship, religious fanaticism and racial bigotry. While the country is becoming a seething cauldron of passion and emotion, it is near impossible to be level-headed and hardnosed about taking the economy to the next phase of transformation. It is pointless to expound on the merits of all those economic programmes when conditions on the ground are not conducive to their advancement. But Umno does not see it this way. In the threat of chaos, Umno sees opportunities to make money. In the shadow of fear, it sees potential for beating people to submission. In the miasma of gloominess, it sees a means to keep the country in thrall.

Economic models cannot be built on sand. They cannot be created out of false hopes. They cannot be plucked out of bad dreams. They must be constructed on solid foundation. They must be supported by cold facts and figures. They must take into account public sentiment which is anything but pro-development. The mood of the people is turning ugly, especially those rallying around the flagpole of supremacy. The supremacists are not bothered about planting the seeds of prosperity to earn higher income. They are more concerned with making sure other races do not stand taller than them. They are baying for blood. Umno is not helping to douse the fire but fuelling it with its virulent attacks on the opposition. The upshot? NEM, GTP, ETP will all go up in smoke.

editorial :www.freemalaysiatoday.com

Monday, November 22, 2010

White Rajah, White Paper, whitewash

NEW The “White Rajah” of Sarawak had the audacity to pull the wool over the people's eyes when he sanctimoniously proclaimed that he supported a move to publish a White Paper to punish “naughty people” who caused trouble in his scarred kingdom. The all-important paper would presumably detail the misdeeds of the outsiders who came to Sarawak to disrupt public peace and order. They would inevitably be branded a threat to state security and swiftly thrown out. All these so-called instigators have no business to disrupt the activities of Taib Mahmud. Leave him alone. Let him continue his rapacious work. Let he and his cronies pillage the treasury uninterrupted. Let he and his family members milk the land without pause.

A White Paper is a serious matter. It is an “authoritative report” that addresses grave issues and spells out the measures the government would take to tackle them. This way, people get an inkling of what it is all about. Often, a White Paper is a response to an internal or external threat. Taib was right. Even during the colonial era, the British masters published a White Paper. In 1962, they came out with such a report to tell the local inhabitants of Sarawak (still then a British colony) the benefits they would enjoy if they linked up with the peninsula to form the Federation of Malaysia. Better inside the federation than outside where “predatory alien neighbours” like Indonesia lay in wait. The “White Tuan” told the brown people: “Malaysia is good for you.”

After wide-eyed Sarawak joined the federation, another White Paper popped up a year later and this time it was all about the threat of militant communism. The government raised the red flag warning that the diabolical Communist Party of Malaya was coordinating violent activities from the Malaysia-Thai border. If the flame was not doused in double quick time, it would eventually engulf the peninsula and consume Sarawak as well. Then again in 1966 the government released yet another White Paper specifically aimed at Sarawak. Once again, it was all about the menacing Red tide growing stronger with the emergence of the Sarawak United Communist Front. There was no way the fledging state could counter the menace. So the Malaysian government argued in the White Paper that it was its solemn responsibility to protect its “child” from this marauder. People were probably swayed by this sales pitch: Sarawak would perish without its big brother.

But what in the world is Taib trying to do with his White Paper? His White Paper is different. His White Paper is to whitewash his misdeeds and tell bare-faced lies. He wants to punish mischief makers for sniffing out his bulging pocket. He wants to penalise all those extremists who went to the extreme of laying bare his ill-gotten gains. The whole world now knows the sordid tale of the “rape” of Sarawak. He certainly put in years of hard work to develop not Sarawak but his property empire. He has been feasting on Sarawak for 30 long years. He has reduced the state to a pauper. No mainstream media in the state or in the peninsula dared expose his dark reign. Then came the alternative media and Taib suddenly found himself a weakened ruler. He has no where to hide except in a White Paper.

His White Paper is his defence, his last hope of saving himself, his family, his Cabinet cronies from a thump. It does not matter if there are no communists in the bush, in the cupboard or under his bed. Just label all members of the opposition, individuals, organisations and alternative media as extremists and hey presto, they become a threat to the “unity, peace, harmony, tranquillity and the security of Sarawakians”. This line of argument is silly. It does not hold water. People who take the wraps off corrupt leaders are not bad people. People who surreptitiously enrich themselves and let the state go to the dogs are bad people. People who speak up against the greed of the leaders are not naughty but brave. People who seek change are not troublemakers but concerned citizens who do not want Taib and his clique to continue abusing the state.

It is always the governments that produce a White Paper if something serious crops up or had come to pass. But this cannot be the definitive answer. It is always one-sided because the information comes from only one source. The White Paper can be slanted to suit the taste of the government. It can be used to burnish the government and tarnish the opposition. It can be misused to prop up a shaky state. It can be a cover for buying over the sympathy of the people. It is time the people of Sarawak wrote their own White Paper and told the truth: “Taib is not good for you."

Editorial
www.freemalaysiatoday.com